ரயில் முன்பதிவு மந்தம்..?? ஐந்து மாதங்களுக்குப் பிறகு ரயில் போக்குவரத்து துவங்கியுள்ள நிலையில் ஆர்வம் இல்லை.

By Ezhilarasan BabuFirst Published Sep 5, 2020, 1:19 PM IST
Highlights

அதேநேரத்தில் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி. தற்போது 7.9.2020 முதல் மாநிலத்திற்குள் பயணியர் இரயில் போக்குவரத்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

காலை 8 மணிக்கு துவங்கி உள்ள ரயில் முன்பதிவு மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஐந்து மாதங்களுக்குப் பிறகு ரயில் போக்குவரத்து துவங்கியுள்ளதால் வேகமாக முன்பதிவு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மக்கள்  மத்தியில் பெரிய ஆர்வம் இல்லாததால் ரயில் முன்பதிவு மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதாக தெரிகிறது. 

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. தமிழக அரசு, கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும், பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளித்துள்ளது. இந்த வகையில் தற்போது, தமிழ்நாட்டில் பொது பேருந்து போக்குவரத்து, அனைத்து வழித்தடங்களிலும் வரும் 7 ஆம் தேதி முதல் இயக்க அரசு முடிவு செய்துள்ளது. 

அதேநேரத்தில் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி. தற்போது 7.9.2020 முதல் மாநிலத்திற்குள் பயணியர் இரயில் போக்குவரத்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில் பயணத்திற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காலை 8 மணிக்கு துவங்கி உள்ள ரயில் முன்பதிவு மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தீபாவளி, கிறிஸ்துமஸ், துர்கா பூஜை உள்ளிட்ட விசேஷ நாட்களுக்கு மிக வேகமாக முன்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிக்கெட் விற்பனை மந்தமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

 

தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஏற்கனவே இ-பாஸ் பெற்று சாலை மார்க்கமாக சென்று விட்டதால், தற்போது ரயில் முன்பதிவு மந்தமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். திருச்சி, மதுரை, தென்காசி கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில் திருநெல்வேலிக்கு மட்டும் முன்பதிவு நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது. 

click me!