இத்தனை நாளா ஜாலியாக இருந்த அரசு ஊழியர்களுக்கு சேர்த்து வைத்த ஆப்பு..!! இனிமேதான் ஆட்டமே ஆரம்பம்..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 5, 2020, 12:53 PM IST
Highlights

50 சதவீத ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சுழற்சி முறையில் பணியாளர்கள் அலுவலத்திற்கு வந்தனர்.

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் சனிக்கிழமையும் இயங்கும் என அறிவிக்கப்பட்டதையடுத்து இன்று அரசு அலுவலகங்கள் வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன. 

கொரனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் முழுமையாக மூடப்பட்டன. இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதி வரை அரசு அலுவலகங்கள் சனிக்கிழமையும் இயங்கும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி வருகிறது, கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது, இதனால் தமிழகத்தில் அரசு அலுவலகங்கள மார்ச் மாதம் மூடப்பட்டது, மே மாதம் கடைசி வாரம் தமிழகத்தில் குறைந்த ஊழியர்களுடன் அரசு அலுவலர்கள் செயல்படத் தொடங்கின, 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சுழற்சி முறையில் பணியாளர்கள் அலுவலத்திற்கு வந்தனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அமலுக்கு வந்ததையடுத்து அரசு அலுவலகங்கள் 100% ஊழியர்களுடன் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமைகளிலும் பணி நாள் தொடரும் என்றும்  தகவல் வெளியானது.அதாவது வாரத்திற்கு 6 நாட்களும் வேலை நடக்கும் எனவும் அதிகாரிகள் ஊழியர்களுக்கு வாய்மொழி  உத்தரவு வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஊரடங்கு காலத்தில் தேங்கியிருக்கும் கோப்புகளை விரைந்து முடிக்கும் வகையில் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை அரசு அலுவலகங்களில் அனைத்து சனிக்கிழமைகளும் வேலைநாட்களாக தமிழக அறிவித்துள்ளது. அரசின் அறிவிப்பை தொடர்ந்து இன்று சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. 

 

click me!