
நெல்லையில் நாளை முதல்வர் வருகையை தொடர்ந்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நெல்லையில் நடைபெற உள்ள அரசு விழாவில் பங்கேற்கிறார். இதற்காக இன்று கன்னியாகுமரியில் இருந்து இன்று நெல்லை செல்லும் அவர், வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். அதைதொடர்ந்து நாளை காலை 10.30 மணிக்கு அரசு மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ள அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதனிடையே முதல்வரின் வருகையையொட்டி நெல்லையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை காலை 6 மணி முதல் அனைத்து கனரக வாகனங்களும், தாழையூத்து சர்வீஸ் ரோடு, தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர் ரோடு, ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் சந்திப்பு, சேரன்மகாதேவி ரோட்டில் சுத்தமல்லி விலக்கு, தென்காசி ரோட்டில் கண்டியப்பேரி விலக்கு வழியாக மாநகர பகுதிக்குள் வராமல் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இலவச பேருந்து திட்டத்திற்கு வித்தியாசமாக நன்றி சொன்ன பெண் ஓவியர்... பஸ் டிக்கெட்டில் முதல்வர் ஓவியம்!!
இதேபோல் காலை 8.30 மணி முதல் மற்ற அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் செல்வதற்கான ஏற்பாடுகள் மாநகர காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சீனிவாச நகர் சந்திப்பில் இருந்து ஜங்ஷன் செல்லும் வாகனங்கள், ஐ.ஓ.பி. காலனி, ராஜகோபாலபுரம் ஆகிய இடங்களில் உள்ள நான்குவழி சாலை பாலத்தின் கீழ் வழியாக மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பாதையை பயன்படுத்தி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், பாளை பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம். இதேபோல் பாளை பொட்டல் விலக்கில் இருந்து மார்க்கெட் வரும் வாகனங்கள் அனைத்தும் சீனிவாசநகர் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். மேலும் சீவலப்பேரி சாலையில் இருந்து சந்திப்பு செல்லும் வாகனங்களும், சந்திப்பு பகுதியில் இருந்து கன்னியாகுமரி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் தச்சநல்லூர் வழியாகவும் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து.. பிளஸ் 2 மாணவன் துடிதுடித்து பலி.. திண்டுக்கல் அருகே பயங்கரம்..
பழையபேட்டை கண்டியப்பேரி சாலை வழியாகவும், சுத்தமல்லி விலக்கில் இருந்து கோபாலசமுத்திரம் வழியாக அம்பை ரோட்டுக்கு சென்று வாகனங்கள் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் மாநகர பகுதிக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து சந்திப்பு பகுதிக்கு செல்ல வேண்டியவர்கள் அண்ணாசாலை, அறிவியல் மையம் வழியாகவும், சந்திப்பில் இருந்து அரசு மருத்துவமனை செல்லும் வாகனங்கள் கலெக்டர் அலுவலக சாலை, மேலப்பாளையம் சிக்னல் வழியாகவும் செல்ல வேண்டும். பாளை பஸ் நிலையத்தில் இருந்து சந்திப்பு செல்லும் வாகனங்கள் வீரமாணிக்கபுரம் சாலை வழியாக மேலப்பாளையம் வந்தடைந்து அங்கிருந்து வடக்கு பைபாஸ் சாலையில் செல்ல வேண்டும். பாளை தெற்கு பஜாரில் இருந்து சந்திப்புக்கு செல்லும் வாகனங்களும் மேலப்பாளையம் சிக்னல் வழியாகவே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாந்திநகரில் இருந்து சந்திப்பு செல்லும் வாகனங்கள் நான்குவழி சாலை வழியாக சென்றடைய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.