திமுக தொண்டனை செருப்பு தூக்கவைத்த டி.ஆர் பாலு... ஸ்டாலின் படித்து படித்து சொல்லியும் திருந்தல..

By Ezhilarasan Babu  |  First Published Oct 10, 2022, 2:16 PM IST

திமுக பொருளாளர் டி.ஆர் பாலுவின் செருப்பை திமுக தொண்டர் ஒருவர் கையில் எடுத்து வந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 


திமுக பொருளாளர் டி.ஆர் பாலுவின் செருப்பை திமுக தொண்டர் ஒருவர் கையில் எடுத்து வந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

நேற்று பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள்  கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது, பொதுமக்கள் மத்தியில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டுமென அறிவுரை கூறியுள்ள நிலையிலும் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது பலரையிம் அதிருச்சியடைய வைத்துள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கட்சியின் முன்னணி தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் மக்கள் மத்தியில் நடந்து கொள்ளும் விதம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. இது திமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மக்களை இழிவுபடுத்தும் அமைச்சர்களின் ஆணவப் பேச்சு மற்றும் ஆணவப் செயல்களை பலரும் கடுமையாக கண்டித்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள்:  தமிழகம் மட்டும் அல்ல..? பல மாநிலங்களை உள்ளடக்கியது தான் திராவிடம்! தேசிய கீதத்தை சுட்டிகாட்டிய ஆர்.என்.ரவி

சமீபத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் மூத்த அமைச்சர் பொன்முடி, மகளீர் இலவச பேருந்து பயணத்தை ' ஓசி ' என விமர்சித்தார். அதுமட்டுமின்றி கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட  அவர் பெண்ணொருவரை ஏய்... நீ உட்காரு என ஒருமையில் பேசி அவமரியாதை செய்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்: கட்டாயப்படுத்தி இந்தியை திணிக்காதீர்..! நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம்.! எச்சரிக்கை விடுக்கும் ஸ்டாலின்

இந்நிலையில் நேற்று நடந்த பொதுக்குழுவில் பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கட்சியின் முன்னணி தலைவர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் மத்தியில் நடந்து கொள்ளும் கண்ணியமற்ற செயல்களால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது, கட்சி கூனி குறுகி நிற்கிறது, எனவே தயவு செய்து கண்ணியத்துடன் நீங்கள் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுரை வழங்கியிருந்தார்.

இப்படி அவர் பேசிக்கொண்டிருந்த போதே,  திமுக பொருளாளர் டி.ஆர் பாலு கட்சி தொண்டர் ஒருவரை தனது செருப்பை எடுத்து வரக்கூற, அத்தொண்டரும் அவரின் செருப்பை கையில் எடுத்து வந்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திமுக பொதுக்குழு கூட்டம் நேற்று  சென்னையில் நடைபெற்றது. அதில் கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், அப்போது பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். அதற்கு முன்பு காலில் இருந்த செருப்பை கட்சியினர் கழற்றிவிட்டு மரியாதை செய்தனர்.  அதன் பிறகு அனைவரும் செருப்பை அணிந்து கொண்டனர். ஆனால் டி. ஆர் பாலு மட்டும் செருப்பு அணிய மறந்து மேடையில் இருக்கையில் அமர்ந்துகொண்டார்.

அப்போது தனது செருப்பை எடுத்து வரும்படி தொண்டர் ஒருவரிடம் அவர் கூற, அந்த தொண்டரும் பாலுவின் செருப்பை கையில்  எடுத்துவந்து அவரின் காலடியில் வைத்தார். இந்த சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதுதான் சமூகநீதி ஆட்சியா, திராவிட மாடலா என பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர். 
 

click me!