தற்கொலைக்கு பயன்படுத்தும் சானிபுவுடர் விற்பனை தடை செய்யப்படும்.. அமைச்சர் மா.சு.

By Ezhilarasan BabuFirst Published Oct 10, 2022, 12:55 PM IST
Highlights


பெரும்பாலானோர் தற்கொலைக்கு பயன்படுத்தும் சானிபவுடர் விற்பனையை தமிழகத்தில் தலை செய்யப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

பெரும்பாலானோர் தற்கொலைக்கு பயன்படுத்தும் சானிபவுடர் விற்பனையை தமிழகத்தில் தலை செய்யப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் கலை அறிவியல் கல்லூரியில் இந்திய மருத்துவ உளவியல் சங்கம் சார்பில் மனநல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் உலகளாவிய முக்கியத்துவம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசிய விவரம் பின்வருமாறு:- கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கிய கொரோனா என்ற கொடியா நோய் தற்போது படிப்படியாக குறைந்துள்ளது. ஆனால் அந்த வைரசை விட மிகக் கொடியது மன உளைச்சல், மன அழுத்தம்.

தற்போது மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மன அழுத்தம் , மன உளைச்சல் அதிகரித்துள்ளது. மன உளைச்சல் இல்லாத யாருமே இல்லை என்று கூறும் அளவிற்கு அது அதிகரித்துள்ளது. குழந்தைகளிடத்தில் இருந்து கூட மனவுளைச்சல் இருக்கிறது. ஆனால் அதில் இருந்து ஒவ்வொருவரும் மீண்டு வர வேண்டும்.  வாழ்க்கையை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும், அதுதான் ஒருவழி, தற்கொலைகளை தடுக்க மருத்துவ துறை சார்பாக "மனம்" என்ற திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. 

இதையும் படியுங்கள்:பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் மனநிலை மாறவேண்டும்... ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உபதேசம்.

தமிழகத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயின்று வரும் மாணவர்களுக்கு தற்போது அதற்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சி முடித்த பிறகு அவர்கள் அதற்கு மனநல ஆலோசனை வழங்குவார்கள். தற்கொலை எண்ணம் ஒருவருக்கு ஒரு முறை வந்து விட்டால், அவர்களின் முடிவு தற்கொலையாகத்தான் இருக்கும். தற்கொலை என்ற எண்ணம் எவருக்கும் வரக்கூடாது. தற்கொலையில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் சானிபவுடர் எலி மருந்து பயன்படுத்தி தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இதையும் படியுங்கள்: கட்டாயப்படுத்தி இந்தியை திணிக்காதீர்..! நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம்.! எச்சரிக்கை விடுக்கும் ஸ்டாலின்

இந்த இரண்டையும் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் சானிபவுடர் விற்பனை தமிழகத்தில் தடை செய்யப்படும். இதேபோல எலிமருந்து தனியாக வந்து வாங்கினால் அவர்களுக்கு கொடுக்க கூடாது, வெளியில் தெரியும்படி அதை விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிட்டு இருக்கிறோம் இவ்வாறு அவர் கூறினார். 

 

click me!