பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் மனநிலை மாறவேண்டும்... ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உபதேசம்.

By Ezhilarasan BabuFirst Published Oct 10, 2022, 12:06 PM IST
Highlights

பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் மனநிலை மாற வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள அவர், அங்கு நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு கூறியுள்ளார். 
 

பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் மனநிலை மாற வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள அவர், அங்கு நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு கூறியுள்ளார். 

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கடந்த சில நாட்களாக  பேசி வரும் கருத்துக்கள் சமூக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. அவரின் கருத்துக்கள் அரசியல் விவாதப் பொருளாகவும் தற்போது மாறி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு  ஆர்.எஸ்.எஸ் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலாக உள்ளது.  என்ற கருத்து உண்மைக்குப் புறம்பானது, அன்பின் பக்கம், சகோதரத்துவத்தின் பக்கம் நிற்பது தான் இந்துமதத்தில் இயல்பு. பிரிவினைவாத சக்திகள் திட்டமிட்டு இது போன்ற தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர் எனக் கூறினார்.

 

இதேபோல் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் சாதி மற்றும் வர்ணம் குறித்து அவர் பேசியது விவாதப் பொருளாக மாறியுள்ளது. சாதி வர்ணம் போன்றவை முற்றிலும் கைவிட படவேண்டியவை, அது குறித்து யாராவது கேட்டால் அதெல்லாம் முடிந்து போன விஷயம் என கூறி கடந்து செல்லவேண்டும்.

இதையும் படியுங்கள்:  கட்டாயப்படுத்தி இந்தியை திணிக்காதீர்..! நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம்.! எச்சரிக்கை விடுக்கும் ஸ்டாலின்

சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஒவ்வொருவரும் சாதி மற்றும் வர்ணத்தை புறம் தள்ள வேண்டும் என வலியுறுத்தி பேசினார். அவரின் இந்த பேச்சு நாடுமுழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்து வந்தாலும், கம்யூனிஸ்ட் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அவரின் இந்த பேச்சு சுத்த நாடகத்தனம் என கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:  நாக்கு வெட்டப்படும்..! எச்சரிக்கை விடுத்த மதுரை மாவட்ட பாஜக தலைவர்..! கைது செய்ய தீவிரம் காட்டும் போலீஸ்

சாதி வர்ணம் கடந்து  செல்லப்பட வேண்டியது அல்ல, அது முற்றிலும் அழித்து ஒழிக்கப்பட வேண்டியது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், கான்பூரில் நடைபெற்ற வால்மீகி ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பகவான் வால்மீகி ராமாயணத்தை எழுதியவர், அதனால்தான் ராமர் குறித்து நமக்கு தெரிய வந்தது.

இந்துக்களுக்கு ராமரை அறிமுகம் செய்து வைத்தது வால்மீகி தான், ஆனால் இன்று வால்மிகி சமூகத்தினர் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். அரசு மக்கள் நலனுக்காக பல திட்டங்களை அறிவித்து வருகிறது. அத்திட்டங்கள் நமக்கான திட்டங்கள் என்பதை மக்கள் உணரவேண்டும், அப்படி இருந்தால் மட்டுமே அதன் பலனைப் பெற முடியும், பிற்படுத்தப்பட்டோருக்கான சட்டங்களை உருவாக்கியுள்ளோம், ஆனால் அதை ஏற்கும் மாற்றம் மக்களிடையே தேவை என அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். எனவே வெறும் சட்டங்கள் இயற்றினாள் மட்டும் போதாது, அது தங்களுக்கானது என்று  மக்கள் உணர வேண்டும். இவ்வாறு மோகன் பகவத் கூறினார்.
 

click me!