மொத்தமாக காலியாகும் அமமுக கூடாரம்... ஸ்கெச்ட் போட்ட செந்தில் பாலாஜி... அடுத்து காலியாகும் முக்கிய விக்கெட்..!

By Thiraviaraj RMFirst Published Jun 29, 2021, 6:21 PM IST
Highlights

ஒருபக்கம் அதிமுகவை கைப்பற்றியே தீருவேன் என்கிற சசிகலா, அவர்களது அமமுகவில் இருக்கும் நிர்வாகிகளை தக்க வைக்க முடியாமல் தடுமாறி வருகின்றனர். 

அமமுகவில் இருந்து பலரும் விலகி வரும் நிலையில், அங்கு மீதமுள்ள நிர்வாகிகளை தட்டித்தூக்க அதிமுகவும், திமுகவும் காய் நகர்த்தி வருகின்றன. தேர்தலுக்கு பிறகு, திருநெல்வேலி மாநகர் மாவட்ட அமமுக செயலாளர் பரமசிவன் ஐயப்பன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மகன் பிரபாகரன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தொடர்ந்து, டி.டி.வி.தினகரனுக்காக எம்.எல்.ஏ. பதவியை இழந்து, கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாதன் ஆகியோர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்த முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தும் பொறுப்பு செந்தில் பாலாஜியிடம் கொடுக்கப்பட்டதாம். அவரும் கனக்கச்சிதமாக தட்டி தூக்கி விட்டார்.

அதுதவிர, அமமுகவில் மேலும் சில நிர்வாகிகளை அழைத்து வரும் பொறுப்பும் செந்தில் பாலாஜியிடம் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், இப்போது அமமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பனிடம் செந்தில் பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

அமமுகவில் இருக்கும் டி.டி.வி.தினகரனுக்கு வலது கை போன்று இருந்தவர் இந்த பழனியப்பன். அவரும் கட்சியை விட்டு வெளியேறினால், தினகரன் மட்டுமே ஒற்றை மரமாய் அமமுகவில் இருப்பார்.  ஆனால் இந்த தகவலை பழனியப்பன் தரப்பினர் மறுக்கவில்லை. ஒருபக்கம் அதிமுகவை கைப்பற்றியே தீருவேன் என்கிற சசிகலா, அவர்களது அமமுகவில் இருக்கும் நிர்வாகிகளை தக்க வைக்க முடியாமல் தடுமாறி வருகின்றனர். 

click me!