சூரப்பா மீதான விசாரணை நிறைவு .. அறிக்கை ரெடி.. ஆப்பு தயார்..?

Published : Jun 29, 2021, 05:03 PM ISTUpdated : Jun 29, 2021, 05:04 PM IST
சூரப்பா மீதான விசாரணை  நிறைவு .. அறிக்கை ரெடி.. ஆப்பு தயார்..?

சுருக்கம்

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணையை ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் நிறைவு செய்தார். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பா மீது ரூ.280 கோடி அளவுக்கு பல்வேறு ஊழல், 

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணையை ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் நிறைவு செய்தார். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பா மீது ரூ.280 கோடி அளவுக்கு பல்வேறு ஊழல்,  முறைகேடு புகார்கள் எழுந்தன.இந்த புகார்கள் தொடர்பான விசாரணையை ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையிலான ஆணையம் மேற்கொண்டு வந்தது, 

இந்நிலையில், தற்போது விசாரணை நிறைவடைந்துள்ளதாக கலையரசன் தெரிவித்துள்ளார். சூரப்பா மீதான புகார்களுக்கு முகாந்திரம் இருப்பதாக ஏற்கனவே விசாரணைக் குழு தெரிவித்திருந்த நிலையில், இறுதிக்கட்ட அறிக்கையைத் தயார் செய்யும் பணி தற்போது நிறைவடைந்துள்ளது.சூரப்பா மீதான புகார்கள், முகாந்திரங்கள், விளக்கங்கள், பரிந்துரைகள் என்று இறுதிக்கட்ட அறிக்கை தயாராக உள்ளதாக கலையரசன் கூறினார்.

இந்நிலையில் , அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்க நேரம் கேட்டிருப்பதாகவும் விசாரணைக் குழு அதிகாரி கலையரசன் தெரிவித்துள்ளார். விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்த பின், அதன் பரிந்துரை அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை விவரத்தை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!