மொத்தமாக காலியாகும் மக்கள் நீதி மய்யம்... கடும் குழப்பத்தில் கமல்ஹாசன்..!

By Thiraviaraj RMFirst Published May 8, 2021, 11:06 AM IST
Highlights

மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் ராஜினாமா செய்து வருவது கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் ராஜினாமா செய்து வருவது கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியிலிருந்து நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருவதால் மநீம கூடாரமே காலியாகி வருவதாக அக்கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.  பெரிய அளவில் மநீம இந்த தேர்தலில் பேசப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் கட்சியின் வளர்ச்சியும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்பதால் கமல்ஹாசன் அரசியலில் இருந்து ஒதுங்கி விடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாக தனது நெருக்கமான நண்பர்கள் வட்டாரத்தில் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்குள் எழுந்துள்ள புகைச்சல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மநீம கட்சியில் முக்கிய நிர்வாகிகள் பலர் ராஜினாமா செய்ததால் பரபரப்பு எழுந்துள்ள நிலையில், ராஜினாமா செய்தவர்களில் ஒருவரான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், மநீம தலைமை நிலைய பொதுச் செயலாளருமான சந்தோஷ்பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘மநீம நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும் கட்சியை விட்டு வெளியேறி விட்டதாக தவறான தகவல் பரவி வருகிறது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை தலைவரிடம் கொடுத்தனர்.

 

தேர்தல் கால செயல்பாடுகளை ஆய்வு செய்து கட்சியை மறுகட்டமைப்பு ஏதுவாக இருக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட கடிதங்கள் தலைவரின் பரிசீலனையில் இருக்கிறது. கட்சியின் துணை தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன் மட்டுமே கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சி கட்டமைப்பில் செய்யப்படும் மாற்றங்கள், புதிய பொறுப்பாளர்கள் குறித்த விவரங்கள் விரைவில் முறையாக அறிவிக்கப்படும் என கூறியுள்ளார். தேர்தல் தோல்வியால் மநீம கட்சியில் மோதல் எழுந்துள்ள நிலையில் சந்தோஷ் பாபுவின் அறிக்கை கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

click me!