நாளை வாக்கு எண்ணிக்கை... தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published May 1, 2021, 3:51 PM IST
Highlights

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. தினசரியும் 15ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
 
வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்கள், அதிகாரிகள் 72 மணிநேரத்திற்கு முன்பாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘’இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும். இடைப்பட்ட நேரத்தில் வாக்கும் எண்ணும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும்.

கொரோனா தொற்று காரணமாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 6 பேர் மாற்றம்.வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு உடல் வெப்ப நிலை 98.6 டிகிரிக்கு மேல் இருந்தால் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதி இல்லை. தமிழகத்தில் 5,64,253 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைப்பது குறித்து ஆலோசிக்கவில்லை. மே 2ந் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை தள்ளி வைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் உண்மை இல்லை’’ என அவர் தெரிவித்துள்ளார். 

click me!