’ஆன் தி ஈவ் ஆஃப் கவுண்டிங் டே’-வில் இருக்கிறோம். விடிந்தால் கல்யாணம்! என்பது போல், நாளை விடிந்தால் இந்த தேசத்தின் அடுத்த ஐந்து ஆண்டுக்கான தலையெழுத்தை நிர்ணயிக்கப்போகும் பிரதமரையும், அவருக்கு உறுதுணை புரியப்போகும் மற்றும் எதிர்க்கப்போகும் படை பட்டாளம் யார்? யார்? என்பதெல்லாம் திரைவிலகி காட்டப்பட இருக்கிறது.
பெட்டியை திறந்தால் பூதம் வரும்! என்பார்கள், நாளை ஓட்டுப் பெட்டியை திறந்தால் கிடைக்கும் ரிசல்ட் யாருக்கு பூதமாய் இருக்கப்போகிறதோ, யாருக்கு தேவதையாய் இருக்கப் போகிறதோ தெரியவில்லை
.
இந்நிலையில், ’எக்ஸிட் போல்’ முடிவுகள் எல்லாமே பி.ஜே.பி. கூட்டணிக்கே கடும் ஆதரவாக இருந்ததோடு, முரட்டு மெஜாரிட்டியுடன் மீண்டும் நமோவே பிரதமராவார் என்று கூறியிருப்பது அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை நாடெங்கிழும் தந்திருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலரின் பார்வையில் இது எப்படியிருக்கிறது! நாளை ரிசல்ட் யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதன் ஹைலைட்ஸை பார்ப்போம்....
”பா.ஜ.க.வே ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எக்ஸிட் போல் கணக்குப்படி முந்நூறு சீட்களை அது கைப்பற்றுமா என்பது சந்தேகமே! என்னைப் பொறுத்தவரையில் 250 இடங்கள் வரை கிடைக்கும்.” என்கிறார் சுமந்த் சி.ராமன்.
“சுதந்திர இந்தியாவின் மிக மோசமான காலகட்ட்டம் கடந்த 5 ஆண்டுகள்தான். ஆனால் எக்ஸிட் போல் மோடிக்கு ஆதரவாக இருப்பது அதிர்ச்சி தருகிறது.” என்கிறார் இயக்குநர் அமீர்.
“எக்ஸிட் போல் முடிவுகளை நான் நம்பவில்லை. இந்தியா முழுவதும் மோடிக்கு எதிரான அலையே வீசியிருக்கிறது. மோடி மீண்டும் பிரதமராவதற்கு வாய்ப்பே இல்லை.” என்பது நாஞ்சில் சம்பத்.
“மோடிதான் மீண்டும் பிரதமர் என்பதில் சந்தேகமே இல்லை. இதனால் எக்ஸிட் போல் முடிவுகள் எந்த ஆச்சரியத்தையும் தரவில்லை. மோடி எதிர்ப்பு என்பது தமிழகத்தில் மட்டுமே இருக்கிறது. அதுவும் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது.” என தமிழருவி மணியன் சொல்கிறார்.
“காங்கிரஸ், பி.ஜே.பி எனும் இரண்டு அதிகார மையங்களும் ஒன்றேதான். எனவே இவர்கள் அல்லாத ஒரு பிரதமரை, நிர்வாக அமைப்பினை மாநில கட்சிகள் இணைந்து உருவாக்கிட வேண்டும்.” என்பது வியனரசுவின் கருத்து.