அடுத்து வெளியானது டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு !! தமிழகத்தில் யாருக்கு எத்தனை இடங்கள் !!

By Selvanayagam PFirst Published May 22, 2019, 10:22 PM IST
Highlights

அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில்  எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்ற தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில்  38 மக்களவைத் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.  கடந்த 19 ஆம் தேதி இறுதிக் கட்டத் தேர்தல் முடிவடைந்த நிலையில் ஆங்கில ஊடகங்கள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டன.

அதில் பெரும்பாலான ஊடகங்கள் அறுதிப்பெரும்பான்மை பெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவித்திருந்தன. தமிழகத்தைப் பொருத்தவரை திமுகவிற்கு 34 முதல் 38 இடங்கள் வரை கிடைக்கும் என தெரிவித்திருந்தன. சில ஊடகங்கள் திமுகவுக்கு 24 தொகுதிகள் கிடைக்கும் என்றும் அதிமுக கூட்டணிக்கு 16 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக அணி 20 இடங்களைக் கைப்பற்றும் என டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் நீதி மய்யம் தமிழகத்தில் 1 இடத்தில் வெல்லும் என்று டைம்ஸ் நவ் கணித்துள்ளது.. 

டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் ,திமுக அணி 20 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் திமுக பெரிய கட்சியாக மீண்டும் உருவெடுக்கும். 

அதேபோல் அதிமுக கூட்டணி 16 இடங்களை பெறும் என்று கணித்து இருக்கிறது. அமமுக, நாம் தமிழர் கட்சிக்கு இரண்டில் ஏதாவது ஒரு கட்சி 1 இடத்தை வெல்ல வாய்ப்புள்ளது என்றும், ஆனால் இது யார் என்று விவரம் வெளியாகவில்லை. 

இதனிடையே  அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் மக்கள் நீதி மய்யம் தமிழகத்தில் 1 இடத்தில் வெல்லும் என்று டைம்ஸ் நவ் கணித்துள்ளது. இதுவரை வெளியான கருத்து கணிப்புகளில் யாரும் மக்கள் நீதி மய்யத்திக்கு வெற்றி என்று கணிக்கவே இல்லை. மாறாக தற்போது டைம்ஸ் நவ் மட்டும் தேர்தலில் ஒரு இடம் கிடைக்கும் என்று கணித்துள்ளது.

click me!