தேர்தல் முடிவை தெரிஞ்சுக்க 6 மணி நேரம் லேட்டாகும் !! தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு !!

Published : May 22, 2019, 09:34 PM IST
தேர்தல் முடிவை தெரிஞ்சுக்க 6 மணி நேரம் லேட்டாகும் !! தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு !!

சுருக்கம்

விவி பேட் ஒப்புகைச் சீட்டுக்களை வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குடன் சரிபார்க்க அவகாசம் தேவைப்படுவதால், மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி முதல் 6 மணி நேரம் வரை தாமதம் ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி மே 19 -ம் தேதி  வரை மக்களவை தேர்தல், 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. இது தவிர  4 மாநில சட்டசபை தேர்தல், தமிழகத்தில் 22 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் அனைத்தும்  நாளை  எண்ணப்பட உள்ளன.

இந்நிலையில் , நாளை தேர்தல் முடிவுகள் வெளியிட 5 அல்லது 6 மணி நேரம் தாமதமாகலாம் என தகவ்ல வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விவிபேட் ஒப்புகைச்சீட்டுகளை வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குடன் சரிபார்க்க அவகாசம் தேவைப்படுகிறது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 விவிபேட் இயந்திரங்களின் ஒப்புகைச்சீட்டுகள் சரிபார்க்கப்படுகின்றன. 

இதனால் மக்களவை தேர்தல் முடிவை அறிவிப்பதில் 5 மணி முதல் 6 மணி  நேரம் வரை கால தாமதம் ஏற்படும். தபால் ஓட்டுகளை எண்ணி முடிப்பதற்கும் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளதாக  அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!