கொரோனாவுக்கு சமாதி..!! மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 13, 2020, 4:31 PM IST
Highlights

தடுப்பூசியை அனைவருக்கும் எவ்வாறு கொண்டு சேர்ப்பது என்பது குறித்து எங்களிடம் உள்ள திறமையான குழுக்களின் மூலம்  ஏற்கனவே திட்டம் வகுத்துள்ளோம், முதலில் எந்த நிறுவனம் கொரோனா தடுப்பூசியை வழங்குகின்றதோ அதை மக்களிடம் கொண்டு சேர்க்க சரியான சங்கிலித்தொடர் வழிமுறைகளை நாங்கள் வகுத்துள்ளோம் 

ஒட்டுமொத்த உலகமும்  கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தடுப்பூசி கிடைக்குமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டின் துவக்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் கிடைக்கும் என்றும், அது பல்வேறு நாடுகளிலிருந்து கிடைக்கலாம் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார். சுகாதாரத் துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு நாட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு சீனாவில் தோன்றியது வைரஸ், ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. 180க்கும் அதிகமான நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை உலக அளவில் 3.80 கோடி பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சுமார் 10 லட்சத்து 86 ஆயிரத்து க்கும் அதிகமானோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 2.86 கோடிப்பேர் உலகளவில் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, கொலம்பியா போன்ற உலக நாடுகள் உலக அளவில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. இதுவரை வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள முதல் நாடாக அமெரிக்கா இருந்துவரும் நிலையில், இன்னும் ஒரு சில வாரங்களில் அமெரிக்காவையே பின்னுக்கு தள்ளும் வகையில் இந்தியாவில் நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. 

இதுவரை அமெரிக்காவின் 8 லட்சத்து 38 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  71 லட்சத்து 27 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.  ஒட்டுமொத்த உலகமும் வைரஸ் தொற்றில் இருந்து மீள வேண்டும் எனில்  ஒரு தடுப்பூசி அவசியம் என ஒட்டுமொத்த உலக நாடுகளும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி எதிர்நோக்கி காத்திருக்கின்றன.  இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தாக்கம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், எப்போது தடுப்பூசி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்,  அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அதாவது அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கிடைக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

அது ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என அவர் கூறியுள்ளார். நாடு முழுதும் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசியை அனைவருக்கும் எவ்வாறு கொண்டு சேர்ப்பது என்பது குறித்து எங்களிடம் உள்ள திறமையான குழுக்களின் மூலம்  ஏற்கனவே திட்டம் வகுத்துள்ளோம், முதலில் எந்த நிறுவனம் கொரோனா தடுப்பூசியை வழங்குகின்றதோ அதை மக்களிடம் கொண்டு சேர்க்க சரியான சங்கிலித்தொடர் வழிமுறைகளை நாங்கள் வகுத்துள்ளோம் என ஹர்ஷவர்த்தன் தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவில் நான்கு கொரோனா தடுப்பூசிகள் இறுதி கட்ட சோதனையில் உள்ளது, அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஒரே நிறுவனம் மட்டும் ஒரு நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை வழங்க முடியாது. எனவே ஒன்றுக்கும் அதிகமான நிறுவனங்களின் தடுப்பூசியை பரிசோதித்து வருகிறோம் என கூறினார்.

 

click me!