பாஜகவுடன் முக்குலத்தோர் புலிப்படை இணைப்பா? எம்எல்ஏ கருணாஸ் பரபரப்பு தகவல்..!

Published : Oct 13, 2020, 04:18 PM IST
பாஜகவுடன் முக்குலத்தோர் புலிப்படை இணைப்பா? எம்எல்ஏ கருணாஸ் பரபரப்பு தகவல்..!

சுருக்கம்

முக்குலத்தோர் புலிப்படையை கலைத்துவிட்டு பாஜகவில் இணையப்போவதாக வந்த தகவல் முற்றிலுமாக தவறு என கருணாஸ் கூறியுள்ளார்.

முக்குலத்தோர் புலிப்படையை கலைத்துவிட்டு பாஜகவில் இணையப்போவதாக வந்த தகவல் முற்றிலுமாக தவறு என கருணாஸ் கூறியுள்ளார்.

மதுரை விமான நிலையத்திற்கு பசுப்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றினால் பாஜகவுடன் தமது கட்சியை இணைக்க தயார் என்று முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான நடிகர் கருணாஸ் கூறியிருந்தார். 

இந்நிலையில், பாஜகவுடன் இணையவுள்ளதாக வரும் தகவல்கள் குறித்த கேள்விக்கு கருணாஸ் பதில் அளிக்கையில், "நாடாளுமன்ற வளாகத்தில் மருதுபாண்டியர்களுக்கு சிலை வைக்க வேண்டும். மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட வேண்டும். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகியோரை இணைத்து தேவர் சமுதாயமாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்து, வன்னியர் சமூகத்துக்கு வழங்கியுள்ள உள் இடஒதுக்கீட்டை எங்களுக்கும் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை மத்திய- மாநில அரசுகளிடத்தில் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

எனவே, எந்தவொரு காலக்கட்டத்திலும் முக்குலத்தோர் புலிப்படை கலைக்கப்படாது, எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைக்கப்படாது. இந்தக் கட்சி முக்குலத்தோரின் உரிமைகளை மீட்டெடுக்க இறுதி வரை போராடும்" என்றார்.

PREV
click me!

Recommended Stories

TN AGRI BUDGET: திராவிட கட்சிகள் செய்யாததை செய்தாரா விஜய்?! முதல் வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்..!
Tamil Nadu Agri Budget: இனி தடையில்லா விவசாயம் சாத்தியம்..! இலவச மின்சாரத்துக்காக ரூ.7,432 கோடி ஒதுக்கீடு..!