ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - இன்னைக்கு மட்டும் எத்தனை பேர் வேட்புமனுதாக்கல் தெரியுமா?

 
Published : Dec 04, 2017, 07:13 PM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - இன்னைக்கு மட்டும் எத்தனை பேர் வேட்புமனுதாக்கல் தெரியுமா?

சுருக்கம்

Today 58 people have filed nominations in RKNagar in Chennai.

சென்னை ஆர்.கே.நகரில் இன்று ஒரு நாளில் மட்டும் இதுவரை 58 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். மேலும் 45 பேர் டொக்கன் பெற்றுவிட்டு மனுத்தாக்கல் செய்ய காத்திருக்கின்றனர்.

ஆர்.கே.நகரில் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. 

இதில் அதிமுக சார்பில் மதுசூதனனும், சசிகலா தரப்பில் டிடிவி தினகரனும், திமுக சார்பில் மருதுகணேஷும் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். 

இவர்கள் மூவரும் நேற்று முன்தினமே வேட்பு மனுத்தாக்கல் செய்து விட்டனர். இவர்களை தொடர்ந்து ஆர்.கே.நகரில் போட்டியிட பெரும்பாலோனோர் வேட்புமனுத்தாக்கல் செய்து வருகின்றனர். 

அந்த வரிசையில் கடந்த முறை பாஜக சார்பில் போட்டியிட்ட கங்கை அமரன் இந்த முறை தேர்வு செய்யப்படவில்லை. அதனால் தற்போது கரு நாகராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.  

மேலும் சுயேட்சையாக நடிகர் விஷாலும் களம் காண்கிறார். கடந்த முறை போட்டியிட்ட ஜெ.தீபா இந்த முறையும் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் காலக்கெடு இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. 

3 மணிக்கு முன்பு வந்தவர்களுக்கு மட்டுமே டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது.  அதில் ஜெ.தீபா, நடிகர் விசால் ஆகியோர் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இந்நிலையில், சென்னை ஆர்.கே.நகரில் இன்று ஒரு நாளில் மட்டும் இதுவரை 58 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். மேலும் 45 பேர் டொக்கன் பெற்றுவிட்டு மனுத்தாக்கல் செய்ய காத்திருக்கின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!