கொரோனாவால் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு... எல்.ஐ.சி எடுத்த அதிரடி முடிவு..!

By Thiraviaraj RMFirst Published Jul 20, 2020, 11:10 AM IST
Highlights

கொரோனா வைரஸால் பலியாகும் பாலிசிதாரர்களுக்கு 24 மணி நேரத்தில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதாக எல்ஐசி நிறுவன மண்டல மேலாளர் கதிரேசன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் பலியாகும் பாலிசிதாரர்களுக்கு 24 மணி நேரத்தில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதாக எல்ஐசி நிறுவன மண்டல மேலாளர் கதிரேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ’’ஒரு குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபருக்கு ஏதாவது ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்தால், அந்தக்குடும்பம் நிலைகுலைந்து போகிறது. அவர் காப்பீடு எடுத்திருந்தால், இழப்பீட்டுத் தொகை அந்தக்குடும்பத்தைக் காப்பாற்றும். தற்போது நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், துரதிருஷ்டவசமாக எல்ஐசி பாலிசி எடுத்த நபர் யாராவது இறக்க நேரிட்டால், அவரது குடும்பத்துக்கு 24 மணி நேரத்தில் இருந்து அதிகபட்சம் 5 நாட்களுக்குள் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. அதன்படி இதுவரை ரூ.55 லட்சம்இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழப்பவர்கள் எல்ஐசி நிறுவனத்தின் பாலிசிதாரர்களா என தினமும் ஆராய்ந்து வருகிறோம். பாலிசிதாரர் எனில், அவர்களது குடும்பத்தினரை எங்கள் அலுவலக ஊழியர்கள் அல்லது ஏஜென்ட்டுகள் மூலமாக தொடர்பு கொண்டு அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது’’ என அவர் தெரிவித்தார். 

click me!