எஸ்வி சேகரை பிடித்து கொடுப்பதா என் வேலை..? போட்டு தாக்கிய பொன்னார்..!

Asianet News Tamil  
Published : May 15, 2018, 04:47 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
எஸ்வி சேகரை பிடித்து கொடுப்பதா என் வேலை..? போட்டு தாக்கிய பொன்னார்..!

சுருக்கம்

to hand over sve shekar is not mu duty said pon radha

எஸ்வி சேகரை பிடித்து கொடுப்பதா என் வேலை..? போட்டு தாக்கிய பொன்னர்..!

பெண் செய்தியாளர்களை பற்றி தவறாக எழுதியதை கண்டித்து அவர் மீது பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டது.

இன்நிலையில் அவரை கைது செய்ய எந்த தடையும் இல்லை என உயர்நீதிமன்றம் கூட அறிவித்து விட்டது. ஆனால் எஸ்வி சேகரை மட்டும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் அவர் ஊரிலேயே இல்லை என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் சமீபத்தில் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானுக்கு கோவிந்தா போட்டு வந்தார் எஸ்வி சேகர். மேலும், நான் சென்னையில் தான் இருக்கிறேன் முடிந்தால் தன்னை போலீசார் கைது செய்யட்டும் என சவால் கூட விடுத்தார்.

ஆனால் பருப்பு வேகவில்லை...அதாவது எஸ்வி சேகரை ஏதோ ஒரு சக்தி கைது செய்ய விடாமல் செய்கிறது என்பதை புரிந்துக்கொள்ள வைக்கிறது ஒரு விழாவில் எஸ்வி சேகரை எதார்த்தமாக சந்திக்க நேரிட்டது என மத்திய இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்

பொன்னர் கூறியது..

போலிசாரால் தேடப்பட்டு வரும் எஸ்வி சேகரை பிடித்துக் கொடுப்பது என்   வேலை அல்ல..அது போலீசார் வேலை... நான் ஒரு விழாவிற்கு சென்றேன்.  அப்போது அவரை எதார்த்தமாக பார்க்க நேரிட்டது என தெரிவித்து உள்ளார்..

அவர் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

பாமக பொதுக்குழுவில் கண்ணீர் சிந்திய ராமதாஸ்... கதறிய தொண்டர்கள்!
தேர்தலுக்கு பின் அன்புமணி பூஜ்ஜியமாவார் - ராமதாஸ் முன்னிலையில் கொந்தளித்த அருள்