அவசரப்பட்டு அமித்ஷாவிற்கு லெட்டர் போட்ட ஓ.பி.எஸ்! பிரம்மாண்டமாக தென்னிந்தியாவிற்குள் நுழையும் பிஜேபிக்கு வாழ்த்து!

 
Published : May 15, 2018, 04:32 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
அவசரப்பட்டு அமித்ஷாவிற்கு லெட்டர் போட்ட ஓ.பி.எஸ்! பிரம்மாண்டமாக தென்னிந்தியாவிற்குள் நுழையும் பிஜேபிக்கு வாழ்த்து!

சுருக்கம்

felicitations for the significant victory of BJP in Karnataka Assembly Elections

கர்நாடகத் தேர்தல் மூலம் பிராமாண்ட வெற்றியை பெற்று tதென்னிந்தியாவிற்குள் நுழையும் பிஜெப்பிக்கு எனது வாழ்த்துக்கள் என தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முன்னணியில் இருக்கும் போதே தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மோடி மற்றும் அமித்ஷாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் கடந்த 12ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை இன்று எண்ணிக்கை நடந்தது வருகிறது. 

பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவிய நிலையில், ஆரம்பம் முதலே பாஜக முன்னிலை வகித்தது. தற்போது பாஜக அதிக முன்னிலை பெற்று மற்ற கட்சிகளை விட முன்னணியில் உள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை, இப்படி முழு தேர்தல் ரிசல் வெளியில் வரமால் இருக்கும் போதே பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து வெற்றியினை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழகத் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்றிருப்பதற்கு மோடி மற்றும் அமித்ஷாவிற்கு வாழ்த்துகள். பாஜக வெற்றி பெற்றுள்ளதால், காவிரியில் நல்ல முடிவு எட்டப்படும் எனக் கூறினார்.

மேலும், காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு நிச்சயம் செயல்படுத்தும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகள் கொடுக்கும் அழுத்தம் நல்லது. ஆனால், இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட தேவையில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து அமித்ஷாவுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியினை ஓ. பன்னீர் செல்வம் தனது ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், கர்நாடகத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கும், பிரம்மாண்டமான முறையில் தென்னிந்தியாவில் நுழையும் பாஜகவிற்கும், அக்கட்சியின் தலைவர் அமித் ஷாவுக்கும் வாழ்த்துகள் இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள O.பன்னீர்செல்வம் என்று குறிப்பிட்டுள்ளார்.  

PREV
click me!

Recommended Stories

அண்ணாமலை என்ற நாயின் வாலை நிமிர்த்த முடியாது.. நான் மோடிக்கு விசுவாசமானவன்.. திடீரென பொங்கிய அண்ணாமலை
தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!