
தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் கொளுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க மீட்பு படையினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை சில்க்ஸ் கட்டத்தில் ஏற்பட்டிருக்கும் தீயை அணைக்கும் பணியில் 125 வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாக மேலும் கூடுதல் வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. கட்டடத்தின் அமைப்பு காரணமாக தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புகைவெளியேறுவதற்கு கட்டடத்தில் வசசி இல்லாததே தீயை அணைப்பதில் தாமதம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் சோர்ந்து போவதைத் தடுக்க ஷிப்ட் முறையில் தீ அணைக்கும் நடைபெற்று வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "சென்னை சில்க்ஸ் தீவிபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. கடையின் உள்ளே இருந்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை."