நமக்கு வாய்த்த அடிமைகள் ரொம்ப நல்லவங்க..அடிமை இப்போ பேசுவாரு.. சர்ச்சையில் சிக்கிய கே.என் நேரு

By Raghupati R  |  First Published May 29, 2022, 7:43 AM IST

DMK : என்னதான் இருந்தாலும் ஒரு சட்டமன்ற உறுப்பினரை இப்படி சொல்லியிருக்க கூடாது என்று திமுக உடன் பிறப்புகளின் மன வருத்தமாக இருக்கிறது.


அமைச்சர் கே.என் நேரு - சர்ச்சை பேச்சு

திமுகவின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சமீபத்தில் திருச்சியில் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட எம்எல்ஏக்கள் சிலர் நன்றி தெரிவித்து பேசினர். அப்போது பேசிய அமைச்சர் கே.என் நேருவின் பேச்சு சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. அக்கூட்டத்தில் பேசிய  கே.என் நேரு, 'நமக்கு வாய்த்த அடிமைகள் ரொம்பவும் நல்லவர்கள். இனி பொன்முடியின் அடிமை புகழேந்தி எம்எல்ஏ பேசுவார்’ என்றார். 

Tap to resize

Latest Videos

undefined

தங்களை அமைச்சர் அடிமைகள் என்று கூறியதை கேட்டு, திமுக எம்எல்ஏக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  திமுக மாவட்ட நிர்வாகிகளும் நேருவின் பேச்சை கேட்டு ஷாக் ஆகினர். இதனை உணர்ந்த அமைச்சர் பொன்முடி, ‘நேரு எப்போதும் இப்படி தான். ஆனால் என்னை பொறுத்தவரை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லை என்று கூறி 'அன்புக்கு நான் அடிமை' என்ற எம்.ஜி.ஆர் பாடலை பாடி அசத்தினார் அமைச்சர் பொன்முடி. 

திமுக

நகைச்சுவை என்ற பெயரில் பேச போய், சொந்த கட்சிக்காரர்களே அதிருப்தி அடையும்படி ஆகிவிட்டதே என்று அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் நொந்து போய் உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்னதான் இருந்தாலும் ஒரு சட்டமன்ற உறுப்பினரை இப்படி சொல்லியிருக்க கூடாது என்று திமுக உடன் பிறப்புகளின் மன வருத்தமாக இருக்கிறது.

இதையும் படிங்க : ராமதாஸ், அன்புமணி செஞ்ச துரோகம்..வன்னிய சமூகம் சும்மா விடாது - காடுவெட்டி குரு மகள் ஆவேசம் !

இதையும் படிங்க : Raid : பிரபல ஆனந்தாஸ் குழும உணவகங்களில் ‘திடீர்’ ஐடி ரெய்டு.. எதற்கு தெரியுமா ?

click me!