உள்ளாட்சி தேர்தல் ‘பரபர’…! 9 மாவட்டங்களுக்கு அதிரடி கட்டுப்பாடுகள் விதித்த தேர்தல் ஆணையம்…!

By manimegalai aFirst Published Sep 28, 2021, 6:53 AM IST
Highlights

உள்ளாட்சி தேர்தல் எதிரொலியாக 9 மாவட்டங்களில் புதிய கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.

சென்னை: உள்ளாட்சி தேர்தல் எதிரொலியாக 9 மாவட்டங்களில் புதிய கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.

ராணிப்பேட்டை, திருப்பத்தூ, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சில முக்கிய கட்டுப்பாடுகள் கொண்ட அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: தேர்தல் நாள் அறிவிப்பு முதல் தேர்தல் நடக்கும் நாள் வரை பிரச்சாரங்களுக்காக ஒலிபெருக்கிகளை காலை  6 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே பயன்படுத்தலாம்.

பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் ஆகியவற்றுக்கு ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டும் எனில் காவல்துறை அனுமதி அவசியம். அரசு வளாகத்தில் சுவரெழுத்துகள், போஸ்டர்களை ஒட்டுதல், கட் அவுட்டுகள், கொடிகள் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்தக்கூடாது.

தமிழ்நாடு திறந்த வெளிகள் சட்டம 1959ல் பார்வையில்படும் பொது இடங்கள் என்பது ஒரு பொது இடத்தில் இருக்கும் அல்லது கடந்து செல்லும் ஒரு நபரின் பார்வையில்படும் தனியார் இடம், கட்டிடம் அடங்கும்.

இட உரிமையாளரிடம் ஒப்புதல் பெற்றுவிட்டோம் என்ற காரணத்தின் அடிப்படையில் சுவரில் எழுதுவது, சுவரொட்டி ஒட்டுவதோ கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

click me!