நகராட்சிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளை பின்னுக்கு தள்ளிய பாஜக.. 1.46 % வாக்குகள் பெற்று 4 வது இடம்..

By Thanalakshmi VFirst Published Feb 22, 2022, 9:37 PM IST
Highlights

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் நகராட்சியில் மட்டும் வெற்றி பெற்ற கட்சி வாரியாக பார்க்கும் போது திமுக 61.41 சதவீதம் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது.
 

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்.,19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சிகள் ஆகிய அமைப்புகளை சேர்த்த 12838 பதிவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இன்று காலை 8 மணி தொட்ங்கிய வாக்குபதிவு விறுவிறுப்பாக நடைபெற்று பெரும்பாலான பகுதிகளில் முடிவடைந்துள்ளது. 

தேர்தல் முடிவுகளின் படி, திமுக பெருவாரியான இடங்களை கைபற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. மேலும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், தேனி உட்பட 21மாநகராட்சிகளையும் திமுக வென்றுள்ளது. மேலும் அதிமுக கோட்டையாக விளங்கிய மேற்கு மண்டலத்தில் கோவை,திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. 

இந்நிலையில் 3843நகராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், 18 பேர் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். ஒரு இடத்தில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 3,842 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதில், 2,360 திமுக வேட்பாளர்களும், 638 அதிமுக வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 151 பேரும், பாஜகவைச் சேர்ந்த 56 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். 

மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 19 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 41 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். இதுதவிர தேமுதிகவைச் சேர்ந்த 12 வேட்பாளர்களும், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 3 வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.இந்த முடிவுகளின்படி, கட்சி வாரியாக நகராட்சி வார்டுகளின் வெற்றி விகிதத்தை பார்க்கும் போது திமுக 61.41 % வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்துஅதிமுக - 16.60 சதவீதமும், இந்திய தேசிய காங்கிரஸ் - 3.93%, பாஜக 1.46 சதவீதம், சிபிஐ (எம்) - 1.07%, சிபிஐ - 0.49% மற்றும் தேமுதிக - 0.31% பெற்றுள்ளனர்.

click me!