புயல் வெள்ளத்தின் போது தமிழக அரசின் செயல்பாடு பாராட்டுக்குறிய வகையில் இருந்தது - கே.எஸ்.அழகிரி

By Velmurugan sFirst Published Dec 12, 2023, 11:10 AM IST
Highlights

சென்னையில் பெரு மழையால் ஏற்பட்ட பாதிப்பு அடைந்த பகுதிகளில் தமிழக அரசின் மீட்பு பணிகள் பாரட்டுக்குறியது என காங்கிரஸ் கட்சியின் மாநிலத்லைவர் கே.எஸ் அழகிரி தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு.

தருமபுரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜாதி வாரி கணக்கெடுப்பு கோரியும், வாக்கு சாவடி முகவர்கள் கூட்டம், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெரு மழை ஏற்பட்டதால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. 

எந்த நிர்வாகத்தாலும் அவ்வளவு பெரிய தண்ணீரை வடித்திருக்க முடியாது. ஏறத்தாழ மேக வெடிப்பு போல மழை பொழிந்திருக்கிறது. ஆனாலும் தமிழக அரசு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை நன்றாக செய்துள்ளது. அரசாங்கத்தை இந்த நேரத்தில் விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. தங்களால் இயன்ற பணிகளை செய்திருக்கிறது. தமிழக அரசை விமர்சிப்பவர்கள் அரசியல் காரணங்களுக்காக விமர்சிப்பவர்களாக தான் இருப்பார்கள். 

ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர் வெட்டி படுகொலை; திருச்சியில் பரபரப்பு

ஒரு இயற்கை பேரிடரை எந்த ஒரு நிர்வாகமும் உடனடியாக சரி செய்து விடமுடியாது. இது மனித குற்றமல்ல. இது இயற்கையே செய்த ஒரு பெரிய செயல். எவ்வளவு விரைவாக மழை நீரை வெளியேற்ற முடியுமோ அவ்வளவு விரைவாக மழை நீரை வெளியேற்றி இருக்கிறார்கள். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக 6 ஆயிரம்  ரூபாய் நிதியுதவி வழங்கியிருப்பது பாராட்டப்பட வேண்டியது. மனிதாபிமான நோக்கத்துடன் தமிழக முதலமைச்சர் செய்திருக்கிறார். இதை தமிழக காங்கிரஸ் கட்சி பாராட்டுகிறது. வரேவற்கிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும் மோடி அரசாங்கம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறது. உச்ச நீதிமன்றமும் அதை தெளிவு படுத்துகிறது. காஷ்மீர் விவகாரத்தில் 370 அரசியல் சட்ட திருத்த நீக்கம் பற்றியும், அந்த மாநிலத்தை மூன்றாக பிரித்தது தொடர்பாக தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறது. இதற்கு மோடி ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால் அவர் அதை செய்ய மாட்டார். இது குறித்து பாஜக வாய்திறக்கவில்லை. காரணம் அவர்கள் சர்வாதிகள். 

பொதுமக்களுக்கு ஜாக்பாட்..! பொங்கல் பரிசு தொகை ரூ.1000 இல்லை அதை விட அதிகம்- எவ்வளவு தெரியுமா.? வெளியான தகவல்

நாடாளுமன்றத்தில் மோடியை பற்றி பேசினால் கூட அனுமதிக்கிறார்கள். ஆனால் அதானியை பற்றி பேசிவிடக்கூடாது என்கிறார்கள். இது கொடுமையிலும் கொடுமை. இது கண்டிக்க தக்கது. ஜாதி வாரி கணக்கெடுப்பு என்பது மத்திய அரசு எடுக்கவேண்டும், அப்பொழுது தான் சட்டமாக்க முடியும், மாநில அரசு எடுத்தால் செய்தியாக தான் இருக்குமே தவிர எந்த பலனும் தராது என்றார்.

click me!