நாளை முதல் நியாய விலைக்கடைகளின் நேரம் மாற்றம்... தமிழக அரசு அதிரடி...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 7, 2021, 8:22 PM IST
Highlights

தற்போது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நியாய விலைக்கடைகளிலும் ஜூன் 8ம் தேதியிலிருந்துபணி நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தளர்வுகளுடன் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு தொற்று கட்டுக்குள் வந்ததை அடுத்து சில தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நியாய விலைக்கடைகளிலும் ஜூன் 8ம் தேதியிலிருந்துபணி நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பார்வையில் உள்ள அரசாணையின் படி 14/06/2021 முடிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடை முறைப்படுத்த அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி காய்கறிகள், மளிகைக் கடைகள் மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் விற்பனை செய்யும் நிலையங்கள் காலை 6-00 மணி முதல் மாலை 5-00 மணி முடிய செயல்பட தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இச்சூழலில் நியாய விலைக் கடைகள் கீழக்காணும் பணி நேரத்தின்படி செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. 

2) எனவே 08.06.2021 முதல் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் காலை 09.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 02.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையிலும் நியாயவிலைக் கடைகள் செயல்படும், இந்த வேலை நேரம் மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும்.

3) அரசு செய்தி வெளியீட்டின்படி கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணைத் தொகை ரூ.2000/- மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருள் தொகுப்பினை 15/06/2021 முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுச் செல்ல ஏதுவாக டோக்கன்கள் விநியோகத்தினை 11/06/2021 முதல் 14/06/2021 முடிய கடைப்பணியாளர்கள் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும். 

4) 11/06/2021 முதல் 14.06.2021 முடிய முற்பகல் நேரத்தில் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பண்டங்களை வழக்கம் போல் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!