#BREAKING தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் அதே நடைமுறை... அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அரசு அதிரடி உத்தரவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 30, 2021, 1:32 PM IST
Highlights

ரேஷன் கடைகளில் நாளை முதல் கைவிரல் ரேகை பதிவு நடைமுறை மீண்டும் அமலாகிறது என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டும் என்றால், குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் பயோமெட்ரிக் எந்திரத்தில் விரல்ரேகை பதிவு செய்ய வேண்டும். அதற்கு பிறகுதான் உணவு பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என்ற நடைமுறை வழக்கத்தில் இருந்து வந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தாலும், அவர் பயோமெட்ரிக் இயந்திரத்தில் கைவைப்பதால் பிறருக்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. 

எனவே கொரோனா தொற்று குறையும் வரை இந்த நடைமுறை அரசால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் நாளை முதல் கைவிரல் ரேகை பதிவு நடைமுறை மீண்டும் அமலாகிறது என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பொருட்டு அரசால் ரூ.4000/- இரு தவணைகளில் ரூ.2000/- வீதம் மே' 21 மற்றும் ஜீன்' 21 மாதங்களில் வழங்க ஆணையிடப்பட்டது. 

மேலும் ஜீன்' 21 மாதத்தில் நிவாரணத் தொகை ரூ.2000/-உடன் மளிகைப் பொருட்கள் வழங்கவும் 14 ஆணையிடப்பட்டது. இதனைப் பெற நியாய விலை கடைகளுக்கு குடும்ப அட்டைதாரர்கள் வரும் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், தாமதமின்றி நிவாரணத் தொகை மற்றும் தொகுப்பு பையினையும் பெற்று செல்ல ஏதுவாக கைவிரல் ரேகை பதிப்பின் நடவடிக்கை நிறுத்தம் செய்யப்பட்டது.

புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த மனுக்கள், அரசால் அறிவிக்கப்பட்ட கொரோனா நிவாரணத் தொகை மற்றும் 14 மளிகைப் பொருட்களின் தொகுப்பு வழங்கும் பணிமேற்கொள்ளப்பட்ட நிலையிலும், புதிய மனுக்களை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு கோர வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும், கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக களப்பணியாளர்களால் விசாரணைக்கு செல்ல இயலாத சூழ்நிலை காரணமாகவும், தகுதியான மனுக்களை ஒப்புதல் அளிப்பதற்கான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது நிவாரண உதவித் தொகை 98.59 சதவீதமும் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு 93.99 சதவீதம் வரை வழங்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் முழுவதுமாக விநியோகம் முடிக்கப்படும் நிலையில் உள்ளதால், 01.07.2021 முதல் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவை, புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணியை மேற்கொள்வதற்கும் மற்றும் கைவிரல் ரேகைப் படிப்பினையும் மீள செயல்முறைப்படுத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

click me!