சிறையும் சிம்மாசனமும் ஒன்றுதான்... அய்யய்யோ கொல்றாங்க... கொல்றாங்க... ஓங்கி ஒலிக்கும் கருணாநிதியின்குரல்

By Thiraviaraj RMFirst Published Jun 30, 2021, 1:06 PM IST
Highlights

சமூகவலைதளங்களில் கருணாநிதியில் ஓலக்குரன் அய்யய்யோ என்னை கொல்றாங்க... கொல்றாங்க... என ஒலித்துக் கொண்டிருக்கிறது.


மறக்க முடியாத தினம். 30.06.2001. சென்னை சிறைச்சாலை வாசலில் இந்த போராளியிடம் கற்றுக்கொண்ட பாடம் 'அச்சம் கடந்தவர்களுக்கு சிறையும் சிம்மாசனமும் ஒன்றுதான்'. தனியாக அவரோடு அமர்ந்திருந்தாலும் ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகள் அவருக்காக தடியடிக்கு நடுவே போராடிக்கொண்டிருந்தார்கள்’’ என கனிமொழி ட்விட் போட்டிருக்கிறார். இன்னொரு பக்கம் சமூகவலைதளங்களில் கருணாநிதியில் ஓலக்குரன் அய்யய்யோ என்னை கொல்றாங்க... கொல்றாங்க... என ஒலித்துக் கொண்டிருக்கிறது.

காரணம் என்ன ஒரு ஃப்ளாஷ்பேக்... மேம்பால ஊழல் வழக்கில் கடந்த 2001-ஆம் ஆண்டில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். ஜூன் 29ஆம் தேதி நள்ளிரவில் அப்போது சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்து முத்துக்கருப்பன் தலைமையிலான போலீசார் கருணாநிதியின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தது.

இதை சற்றும் எதிர்பாராத கருணாநிதி, அப்போதைய மத்திய அமைச்சர் முரசொலி மாறனுக்கு விவரத்தை தெரிவிக்க, இரவு உடையில் இருந்த அவர் ஓடோடி வந்தார். அவரை உள்ளே செல்ல காவல்துறை அனுமதிக்கவில்லை. தடை மீறி அவர் உள்ளே சென்றார். லுங்கியில் இருந்தபடியே கருணாநிதி கைது செய்யப்பட்டார். அவரை எங்கே அழைத்துச் செல்லப்படுகிறார் என்று திமுகவினர் கேட்க, ஒருவருக்கும் பதில் சொல்லவில்லை.

மறக்க முடியாத தினம். 30.06.2001. சென்னை சிறைச்சாலை வாசலில் இந்த போராளியிடம் கற்றுக்கொண்ட பாடம் 'அச்சம் கடந்தவர்களுக்கு சிறையும் சிம்மாசனமும் ஒன்றுதான்'. தனியாக அவரோடு அமர்ந்திருந்தாலும் ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகள் அவருக்காக தடியடிக்கு நடுவே போராடிக்கொண்டிருந்தார்கள். pic.twitter.com/D2FWWjUwQ5

— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK)

 

ஓமந்தூரார் மாளிகைக்கு அருகில் இருந்த சிபிசிஐடி அலுவலகத்தில் கருணாநிதியிடம் விசாரணை நடக்கிறது என்பதை அறிந்து கனிமொழி, ராஜாத்தி அம்மாள் உள்ளிட்டோர் அங்கு சென்றனர். ஆனால் அதற்குள் அவரை வேப்பேரி அழைத்துச் சென்றுவிட்டனர். வேப்பேரி காவல் நிலையம் அழைத்து வருவதாக தகவல் கிடைத்ததால் கருணாநிதி குடும்பத்தினர் அங்கு திரண்டிருந்தனர். ஆனால் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தப்பட்டு ஜூலை 10-ஆம் தேதி வரைக்கும் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டதால், சிறையில் அடைப்பதற்காக கருணாநிதியை அழைத்துச் சென்றனர்.

வீடியோவே இருக்கு . சரி பேனர் ஏன் வச்சிருக்கீங்க தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ரோட்டோரமா pic.twitter.com/ozBb03phSb

— MuraliBJP (@muralibjpit)

 


சிறைக்குள் அழைத்து செல்லும்போது, சென்னை மத்திய சிறை வாசலிலேயே ஒரு மணிநேரம் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் கருணாநிதி. அவருக்கு அருகில் அமர்ந்து கனிமொழியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்கிடையில் சிறைச்சாலைக்கு வெளியே ஏராளமான திமுகவினர் கூடினர்.

கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட போது, அய்யோ அய்யய்யோ கொலை பண்றாங்க.. கொலை பண்ணுறாங்க என்று கதறிய வீடியோ அன்று தொலைக்காட்சிகளில் வெளியாகியது. இந்த சம்பவம் நடந்து 20 ஆண்டுகள் ஓடிவிட்டன. கருணாநிதியுடன் சிறைச் சாலையில் அமர்ந்து கனிமொழி தர்ணா நடத்திய தினம் இன்று.

click me!