காவலர்கள் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். பதவியேற்ற அடுத்த நொடியில் டிஜிபி எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Jun 30, 2021, 12:51 PM IST
Highlights

தமிழகத்தில் முக்கியமான ஒரு சந்தர்ப்பத்தை எனக்கு வழங்கி இருக்கிறார்கள், அதற்காக முதலமைச்சருக்கு நான் மிகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக முதலமைச்சர் பிரிவில் கொடுக்கப்பட்ட மனுக்கள் 30 நாட்களுக்குள் தீவிர விசாரணை  மேற்கொண்டு முடித்து வைக்கப்படும்.

காவலர்களை பொறுத்தவரை பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அதே போன்று  மனித உரிமைகளை மதித்து நடந்து கொள்வதுடன் அதற்கான பயிற்சியும் காவலர்களுக்கு வழங்கப்படும் என புதிதாய காவல் துறை சட்ட ஒழுங்கு டிஜிபியாக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட  சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.தற்போதைய டிஜிபி திரிபாதியின் பதவிக்காலம் இன்றுடன் (ஜூன் 30) முடிவடைகிறது.நேற்றைய முன் தினம் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் டெல்லி யுபிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 

தமிழக புதிய டி.ஜி.பிக்கான போட்டியில்  சைலேந்திரபாபு, கரம் சின்ஹா ,சஞ்சய் அரோரா, கந்தசாமி, ஷகில் அக்தர் உட்பட 7 பேர் உள்ளனர். இதனையடுத்து தற்போது தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பியாக சைலேந்திரபாபுவை நியமித்துள்ளது தமிழக அரசு. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை சேர்ந்த சைலேந்திரபாபு, 1987 ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாக பணிக்கு தனது 25 வயதில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு காவல் பணிநிலைகளில் பணிபுரிந்த சைலேந்திரபாபு  மூன்று ஆண்டுகள் கடலோர பாதுகாப்பு படையின் தலைவராகவும் செயல்பட்டவர், 

சைலேந்திரபாபு தற்போது தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள்துறை, ரயில்வே காவல்துறை டி.ஜி.பியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் காவல்துறை சட்ட ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, தமிழகத்தில் முக்கியமான ஒரு சந்தர்ப்பத்தை எனக்கு வழங்கி இருக்கிறார்கள், அதற்காக முதலமைச்சருக்கு நான் மிகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 

தமிழக முதலமைச்சர் பிரிவில் கொடுக்கப்பட்ட மனுக்கள் 30 நாட்களுக்குள் தீவிர விசாரணை  மேற்கொண்டு முடித்து வைக்கப்படும். காவலர்களை பொறுத்தவரை பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அதே போன்று  மனித உரிமைகளை மதித்து நடந்து கொள்வதுடன் அதற்கான பயிற்சியும் காவலர்களுக்கு வழங்கப்படும். பொதுமக்கள் இவை அனைத்திற்கும் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 
 

click me!