சைலேந்திரபாபு டி.ஜி.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி..? கொய்யாப்பழ கிளவியும் காரணமா..?

By Thiraviaraj RMFirst Published Jun 30, 2021, 12:41 PM IST
Highlights

தமிழ்நாடு முழுவதும் கிழக்கு மேற்காக, வடக்கு தெற்காக, மிதிவண்டி மூலமே அளந்து பார்த்துள்ள ஒரே ஐபிஎஸ் உயரதிகாரி என்றால், அது நிச்சயம் சைலேந்திரபாபு ஐபிஎஸ்., ஆகதான் இருக்கும்.

புதிதாகப் பொறுப்பேற்கவிருக்கும்  தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு, தேர்தலுக்கு முன்பிருந்தே, தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகனோடு, மிக மிக நெருக்கமாக இருந்தார். தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியான இவர், தன்னுடைய ஒட்டுமொத்த சர்வீஸ் காலத்தில், எந்தவித மத்திய அரசு தொடர்பான காவல்துறைப் பணிகளில் ஈடுபட்டதில்லை. கனிமொழியின் ஆதரவும் இவருக்கு இருந்தது.

தமிழ்நாடு முழுவதும் கிழக்கு மேற்காக, வடக்கு தெற்காக, மிதிவண்டி மூலமே அளந்து பார்த்துள்ள ஒரே ஐபிஎஸ் உயரதிகாரி என்றால், அது நிச்சயம் சைலேந்திரபாபு ஐபிஎஸ்., ஆகதான் இருக்கும்.

அதைவிட, நாற்றின் வாசத்தை சுவாசமாக்கிக் கொள்ள துடிக்கும் மண்ணின் மீதான காதலும், தெருவோர விற்பனையாளர்களோடு கலந்து பேசி, அவர்களையெல்லாம தொழில் முனைவோர்களாக உயர்த்த வேண்டும் என்கிற துடிப்பும், கானல் நீராகாத சிந்தனையும் விதைகளாக்கி விதைத்துக் கொண்டிருப்பவராகவும் பொதுமக்கள் பார்வையில் உயர்ந்துநிற்கிறார் சைலேந்திரபாபு ஐபிஎஸ்.

58 வயதில் காவல்துறை இயக்குனர் (டி.ஜி.பி) என்ற உயர்ந்த அந்தஸ்துக்கு வந்து விட்ட ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், உச்சப்பட்ச அதிகாரத்தை சுவைத்துக் கொண்டு, நான்கு சுவருக்குள் ஏஸி அறைக்குள் அமர்ந்து கொண்டு கோப்புகளோடு விளையாடி தங்கள் கடமையை முடித்துக் கொள்ளலாம். இதுவரை இப்படிபட்ட மனப்பான்மையுள்ள ஐபிஎஸ் உயரதிகாரிகளைதான் தமிழகம் கண்டிருக்கிறது. ஆனால், அவர்களில் இருந்து விதிவிலக்காக, வித்தியாசமாக கொய்யாப்பழம் விற்பனை செய்கிற சாலையோர மூதாட்டியிடம் கூட அவரது மகனைப் போல, பேரனைப் போல பாசத்தோடும், பரிவோடும் பேசுகிற ஒரு காவல்துறை உயரதிகாரியை, சைலேந்திரபாபு ஐபிஎஸ் மூலமாகதான் தமிழகம் அடையாளம் கண்டிருக்கிறது.

உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் தான் மட்டுமே தனித்த அக்கறை கொள்ளாமல், இளம் சமுதாயமும், தமிழர்களும் முக்கிய கடமையாக கொள்ள வேண்டும் என்ற பாடத்தை, பல நூறு வீடியோக்கள் மூலம் எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பயிற்றுவிக்கும் மனப்பாங்கும் படைத்தவராக இருக்கிறார் சைலேந்திர பாபு ஐபிஎஸ். இவையெல்லாம் சேர்ந்துதான் அவரை தமிழக டிஜிபி பொறுப்பில் அமரவைத்துள்ளது.

click me!