மக்கள் தடுப்பூசிக்காக வீதியில் இறங்கி போராட வேண்டாம்.. மத்திய அரசை வில்லனாக்கும் மா.சு

By Ezhilarasan BabuFirst Published Jun 30, 2021, 12:18 PM IST
Highlights

ஆனால் தடுப்பூசி தட்டுபாடாக உள்ளது. இதனால் மக்கள் வீதியில் இறங்கி போராடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் கவலைப்பட வேண்டாம் எப்படி அனைத்து மக்களுக்கு தமிழக அரசு போராடி தடுப்பூசியை பெற்று தரும்.

தமிழகத்தில் பெருமளவு தடுப்பூசி தட்டுபாடு நிலவுகிறது. மக்களும் வீதியில் இறங்கி தடுப்பூசிகாக போராட்டும் நிலையில் தமிழக முதல்வர் தொடர்ந்து தடுப்பூசி குறித்து பிரதமரிடம் பேசி வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தாம்பரம் சானடோரியம் காச நோய் மருத்துவமனையில் தாம்பரம் ரோட்டேரி சங்கம் சார்பில் காச நோய் கண்டுபிடிப்பு  எக்ஸ்ரே ஊர்தி வழங்கப்பட்டது. இந்த வாகனத்தை மருத்துவமனைக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 

தமிழகத்தில் இருந்து காசநோயை அகற்ற அரசு முயற்ச்சி எடுத்து வருகிறது. இந்தியாவில் காசநோயால் பாதிக்கப்படவர்கள் 25 சதவீதம் பேர் உள்ளனர். இந்த சதவீதத்தை குறைக்க தமிழக அரசு முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. சென்னை மட்டும் இன்றி தமிழகம் முழுவதும் தடுப்பூசி இல்லை. கையிருப்பில் 88000 தடுப்பூசிகள் மட்டுமே உள்ளது. இதுவும் சில மணி நேரங்களில் தீர்ந்துவிடும். பெருமளவில் தமிழ்கத்தில் தடுப்பூசி தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி தொடர்ச்சியாக தமிழகத்திற்க்கு வேண்டும் என்ற கோரிக்கை முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தொடர்ந்து வைத்து வருகின்றார். 90 சதவீதம் தடுப்பூசிளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் தமிழகத்தில் அனைவரும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள தயாராக உள்ளனர்.

ஆனால் தடுப்பூசி தட்டுபாடாக உள்ளது. இதனால் மக்கள் வீதியில் இறங்கி போராடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் கவலைப்பட வேண்டாம் எப்படி அனைத்து மக்களுக்கு தமிழக அரசு போராடி தடுப்பூசியை பெற்று தரும்.மத்திய அரசு கிடங்கில் இருந்து 2 லட்சம் தடுப்பூசிகளை தற்போது வழங்குவதாக மத்திய சுகாதார துறை தெறிவித்துள்ளது.தடுப்பூசி வேண்டும் என தமிழக மக்கள் போராட வேண்டாம் அவர்களுக்கான தடுப்பூசி தமிழக அரசு உறுதி செய்யும். தமிழகத்தில் டெல்டா வைரஸ் சோதனை ஆய்வு கூடம் சென்னையில் விரைவில் தொடங்கபடும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
 

click me!