ரேஷன் அட்டைக்கு தலா 1000 ரூபாய்..!! கொரோனா பீதியில் முதலமைச்சரின் குஷியான அறிவிப்பு...!!

By Ezhilarasan BabuFirst Published Mar 24, 2020, 10:22 AM IST
Highlights

அவர்களுக்கு உதவும் வகையில் குடும்ப அட்டைகளுக்கு தலா 5 ஆயிரம் வழங்க வேண்டும் என பல எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்திருந்தனர் .  இந்நிலையிங் இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் இன்று சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். 
 

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.  தமிழகம் முழுவதும்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்  அத்தியாவசிய தேவைகளுக்காக இந்த நிதி வழங்க தமிழக அரசு முன்வந்துள்ளது .  தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார் .  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது . இந்நிலையில் இன்று முதல் வரும் 31ம் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவதாக தமிழக முதலமைச்சர் அறிவித்தார் . 

ஆனாலும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் மளிகை கடைகள் ,  உணவகங்கள் ,  மற்றும் மருத்துவ சேவைகள் அடிப்படை அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என அவர் அறிவித்தார் .  அதேநேரத்தில் ஊரடங்கு உத்தரவு இருப்பதால் ஏழை எளிய மக்கள் சாதாரண கூலித் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ,  அவர்களுக்கு உதவும் வகையில் குடும்ப அட்டைகளுக்கு தலா 5 ஆயிரம் வழங்க வேண்டும் என பல எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்திருந்தனர் .  இந்நிலையிங் இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் இன்று சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். 

 குடும்ப அட்டைக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என சட்டமன்றத்தில் அவர் , அறிவித்தார் .  அதேபோல ரேஷன் கடைகளில் கூட்டம் அதிக அளவில்  கூட்டம் கூடுவதை தவிர்க்க வகையில் டோக்கன் முறையில் இந்த ஆயிரம் ரூபாய்  வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அறிவித்தார் .  ஏற்கனவே கொரோனா வைரஸ் எதிர்கொள்ள தமிழக அரசு 500 கோடி நிதி ஒதுக்கிய நிலையில் ,  தற்போது குடும்பத்திற்கு 1000 ரூபாய் என சுமார்  3250  கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் நடைபாதை வியாபாரிகளுக்கு கூடதலாக 1000 ரூயாப் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.  

click me!