அடங்க மறுத்த ஷாகின் பாக் போராட்டக்காரர்கள்... துரத்தியடித்த போலீஸார்..!

By Thiraviaraj RMFirst Published Mar 24, 2020, 10:17 AM IST
Highlights

டெல்லி ஷாகின் பாக் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களை இன்று காலை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ளனர். 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களை இன்று காலை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ளனர். 

உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் முழுமையாக முடக்கப்பட்டுள்ள நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களை இன்று காலை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ளனர். 

நாடு முழுவதும் சிஏஏ போராட்டம் நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த ஷாகின் பாக் போராட்டம் நடைபெறும் இடத்தை போலீசார் இன்று காலை 7 மணியளவில் சூழ்ந்தனர். இதையடுத்து, போராட்டக்காரர்களைக் கலைந்து செல்லும்படி போலீசார் பலமுறை வலியுறுத்திய போதிலும், அவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்தனர். இதையடுத்து, சுமார் 7.30 மணி அளவில் போராட்டக்காரர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர். 

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக 144 பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பெரும் கூட்டமாகக் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டதாகவும், தொடர்ந்து, ஆறு பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் ஒருவர் கூறினார்.

தொடர்ந்து, சிஏஏவுக்கு எதிராக ஜாஃபர்பாத், டர்க்மன் கேட் உள்ளிட்ட டெல்லியின் பல்வேறு பகுதியில் நடந்து வந்த போராட்டங்களும் இன்று காலை அகற்றப்பட்டுள்ளது. 

click me!