TN Budget: உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களே உங்க படிப்புக்கு நாங்க கேரண்டி.. தெறிக்கவிட்ட பிடிஆர்.

By Ezhilarasan BabuFirst Published Mar 18, 2022, 11:44 AM IST
Highlights

கடைக்கோடி மனிதனுக்கும் திட்டங்கள் போய் சேரும் வகையில் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என்றார். அதேபோல் உக்ரைன் நாட்டில் படிக்க சென்று போர் காரணமாக நாடு திரும்பியுள்ள தமிழக மாணவர்கள் தமிழ்நாட்டிலோ அல்லது அயல்நாட்டிலோ படிப்பை தொடரும் வகையில் தமிழக அரசு உதவிகளை செய்யும் என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். 

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ படிப்பை தொடர தமிழக அரசு தேவையான உதவிகளை செய்யும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இதற்காக கொள்கைகளை மத்திய அரசும் வகுத்து வருகிறது என்றும் அவர் கூறினார். தமிழக பட்ஜெட் உரையின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்: TN Budget 2022 : உயர்கல்வி பயில அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 - பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு

தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார். திட்டமிட்டபடி காலை 10 மணிக்கு பட்ஜெட் கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கிய உடன்  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தங்களுக்கு பேச வாய்ப்பளிக்க வேண்டும் வலியுறுத்தினார்.  பட்ஜெட்டை தாக்கல் செய்து முடித்த பிறகு பேச வாய்ப்பு வழங்கப்படும் என சபாநாயகர் கூறினார். அதை ஏற்க மறுத்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் சிறிது நேரம் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அப்போது பட்ஜெட் உரையை சிறுதி நேரம் பிடிஆர் பழனிவேல்ராஜன் நிறுத்தி வைத்தார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பிறகு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து பட்ஜெட்டை வாசித்து வருகிறார். அதில் பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார். கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த பட்ஜெட் வாசிக்கப்பட்டு வருகிறது, அதே இடத்தில் தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை இதில் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.  ராஷ்யா-  உக்ரைன் இடையேயான போர் மாநில பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அவர், அதைக் கருத்திக் கொண்டே பட்ஜெட் உருவாக்கியுள்ளதாக கூறினார். பெண்கள் இளைஞர்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

கடைக்கோடி மனிதனுக்கும் திட்டங்கள் போய் சேரும் வகையில் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என்றார். அதேபோல் உக்ரைன் நாட்டில் படிக்க சென்று போர் காரணமாக நாடு திரும்பியுள்ள தமிழக மாணவர்கள் தமிழ்நாட்டிலோ அல்லது அயல்நாட்டிலோ படிப்பை தொடரும் வகையில் தமிழக அரசு உதவிகளை செய்யும் என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். இதற்காக மத்திய அரசும் கொள்கை வகுத்து வருகிறது என்றார். அதேபோல மாணவர்களின் தனித்திறனை வளர்க்கும் நோக்கில் தொடங்கப்பட்ட " நான் முதல்வன்"  திட்டத்திற்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக கூறினார்.

இதையும் படியுங்கள்: TN Budget : பொருளாதாரத்தில் உக்ரைன் போர் தாக்கதை ஏற்படுத்தும்.. பட்ஜெட் உரையில் பிடிஆர் பகீர்.

போர் காரணமாக உக்ரைன் நாட்டில் இருந்து நாடு திரும்பியுள்ள மாணவர்கள் தாங்கள் பாதியில் விட்டு வந்த கல்வி உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ தொடர மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், பட்ஜெட் உரையில் பிடிஆர், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருப்பது, உக்ரேனில் இருந்து திரும்பிய மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது. 
 

click me!