அதிமுக முன்னாள் அமைச்சர் சி. வி.சண்முகத்தின் அறிவுரையோ, ஆலோசனையோ பாஜகவிற்கு தேவையில்லை. அதற்கான உரிமையோ அல்லது தகுதியோ அவருக்கு இல்லை என்று பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
நெய்வேலி என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி அதிமுக சார்பில் நெய்வேலி சுரங்கம் முன்பு என்எல்சி நிறுவனத்தை கண்டித்தும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் தமிழக அரசுசைகண்டித்தும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம், மத்திய பாஜக அரசு சொல்லுகின்ற பணிகளை வாயை மூடி தன் தலையில் தூக்கிவைத்து திமுக ஸ்டாலின் அரசு செய்து வருகிறது. குறிப்பாக என்எல்சி விவகாரத்தில் ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி லாபம் ஈட்டுவதாக நிலங்களை உடனே கையபடுத்த மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது அதனை தமிழக அரசு செய்து வருகிறது.
தமிழகத்தில் திமுக அரசு மத்திய அரசை விமர்சித்து பேசுகிறார்கள். ஆனால் டெல்லி சென்றால் மத்திய அரசிடம் அய்யா அம்மா தாயே என கெஞ்சுகிறார்கள். 39 எம்.பி களும் பிச்சை எடுகிறார்கள். மத்திய அமைச்சர்களிடம் கெஞ்சுவது தான் திமுகவின் சமுகநீதி. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக - பாஜக கூட்டணி வர உள்ளது. திமுகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் ஓட போகிறார்கள் என்று கூறினார்.
இதையும் படிங்க..டிசம்பர் 21 - நேரம் குறிச்ச ஓபிஎஸ் டீம்.. பண்ருட்டி ராமச்சந்திரன் போட்ட பிளான்.. பதறும் இபிஎஸ் & கோ
அதிமுகவை சேர்ந்த சி. வி.சண்முகத்தின் இந்த சர்ச்சை பேச்சு பாஜக வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘அஇஅதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான சி.வி சண்முகம் அவர்கள் பாஜகவுடன் திமுக கூட்டணி வரும் என்றும், திமுகவும் பாஜகவும் ஒன்று என்றும் கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் திமுக அரசின் செயல்பாடுகளை தலைவர் அண்ணாமலை அவர்களின் தலைமையில் கடுமையாக விமர்சித்து ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக போராடி வரும் பாரதிய ஜனதா கட்சி எப்போது, யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற சி.வி சண்முகத்தின் அறிவுரையோ, ஆலோசனையோ பாஜகவிற்கு தேவையில்லை. அதற்கான உரிமையோ அல்லது தகுதியோ அவருக்கு இல்லை.
மேலும், காவி துண்டு போட்டவன் பாஜக தொண்டன் என்றெல்லாம் 'நிதானமில்லாமல்' பேசியுள்ளதும் அவரின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. வருங்காலத்தில் அவர் பாஜகவை குறித்த விமர்சனங்களை தவிர்ப்பார் என்று கருதுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க..தமிழ்நாட்டின் நம்பர் 1 நடிகர்.. சினிமா, அதிகாரம் எவ்வளவு நாளுக்கு? திமுகவுக்கு சவால் விடும் அண்ணாமலை