வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, பாஜக இடையே கூட்டணி அமையும், அந்தநேரத்தில் தற்போது கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் அனைத்தும் ஓடப்போகின்றன என்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் பேசியுள்ளார்.
நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்திற்கு வீடு, நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும், நிரந்தர பணி வழங்கக் கோரியும் என்.எல்.சி. சுரங்கம் முன்பாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித் தேவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பிரதமரை அவமதித்த பாக். அமைச்சருக்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்? திமுகவுக்கு வானதி கேள்வி
போராட்டத்தின் போது பேசிய சி.வி.சண்முகம், தமிழகத்தில் மத்திய பாஜக அரசை விமர்சிக்கும் திமுக, டெல்லி சென்றால் மத்திய அரசிடம் அம்மா, அய்யா, தாயே என கெஞ்சுகின்றனர். திமுகவின் 39 உறுப்பினர்களும் டெல்லியில் பிச்சை தான் எடுக்கின்றனர். மத்திய அமைச்சர்களிடம் கெஞ்சுவது தான் திமுகவின் சமூக நீதி.
நாடாளுமன்ற தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி - துரைவைகோ
மத்திய பாஜக அரசு சொல்லும் பணிகளை எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் சத்தமின்றி திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக என்.எல்.சி.யில் ஆண்டுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய் வருவாய் வருகிறது, சுற்றியுள்ள நிலத்தை கையகப்படுத்த மத்திய அரசு தெரிவித்த நிலையில் அதனை திமுக அரசு செய்து வருகிறது.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, பாஜக கூட்டணி அமையப் போகிறது. தற்போது கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் அப்போது ஓடப்போகிறார்கள் என்றார்.