திமுகவில் 10வது இடத்தில் உள்ள அமைச்சர், அதிகாரத்தையும் ஆட்சியையும் வைத்து சினிமாவை எவ்வளவு நாள் வைத்துக் கொள்கிறார்கள் என பார்ப்போம் என்று சவால் விட்டுள்ளார் அண்ணாமலை.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. அப்போது பேசிய அவர், அன்னூர் டிட்கோ தொழிற் பூங்கா அமைவதாக இருப்பதாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
அதற்கு ஆதரவாக பாஜகவும் பல போராட்டங்கள் செய்துள்ளனர். அரசு நிலம் எடுக்கவில்லை என்று சொல்லிவிட்டனர். அரசு அறிவிப்புக்கு வரவேற்பு அளித்தது பாஜக.விவசாய நிலத்தை எடுக்க வேண்டாம் என்பது தான் கோரிக்கை. விவசாயிகள் சமாதானம் ஆனவுடன், மீண்டும் இடத்தை எடுக்க கூடாது.
அண்ணாமலைக்கு ஊழல் வாதிகளுக்கும் தான் பிரச்சனை. பாஜக நிர்வாகிகள் திங்கள்கிழமை விவசாயிகளை சந்திக்கின்றனர். திமுகவின் 2006ம் ஆண்டு வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் நிலம் இல்லாதவர்களுக்கு 2 ஏக்கர் கொடுக்கிறோம் என்று சொன்னார்கள். அதை நிறைவேற்றவில்லை. அதேபோல தான் திமுக 2021 தேர்தல் அறிக்கையே இன்னும் நிறைவேற்றவில்லை.
எம்.பி ராசா மந்திரியாக மந்திரியவையில் இருந்தாரா ? என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. தொடர்ந்து அவர் தப்பு தப்பான தரவுகளை சொல்லி வருகிறார். பச்சை பொய்யை பத்திரிக்கையாளர் முன்பு ஆ.ராசா பேசிக்கொண்டு சென்றுள்ளார். இதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. கோவையிலிருந்து கிணத்துக்கடவு வழியாக கனிம வள கொள்ளை கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது. இதை கண்டித்து உண்ணாவிரதம் பேராட்டம் விரைவில் நடத்தப்படும்.
இதையும் படிங்க..கடலில் இருந்து வெளிவந்த ஏலியன்கள்.. பூமிக்கு வந்த புதிய ஆபத்து ? வைரல் படத்தால் பரபரப்பு !
பால் விலை ஏற்றியவுடன் ஆரஞ் கலர் பாக்கெட் விற்பனை குறைந்துள்ளது. விலை குறைந்த நில நிற பால் பாக்கெட்டை மக்கள் வாங்குகின்றனர். இன்று நெய் விலை ஏற்றி உள்ளனர். திமுகவின் சம்பந்தம் செய்த நபர் புதிய பால் கம்பெனியை ஆரம்பித்துள்ளார். 5 ஆயிரம் லிட்டர் பால் ஆரஞ்சு வண்ண பாக்கெட் விற்பனை குறைந்துள்ளது.
கையில் கட்டியிருந்த கடிகாரம் 3.5 இலட்சம் குற்றசாட்டிற்கு பதில் தெரிவித்த அண்ணாமலை, ரபேல் விமானத்தின் உதிரிபாகங்கள் மூலம் செய்த கை கடிகாரம் இது. எனக்கு பிடித்ததை நான் பன்னுவேன். என் உயிர் உள்ளவரை இந்த கடிகாரம் கட்டுவேன். ரபேல் விமானம் ஓட்டக்கூடிய பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை என்று பதில் அளித்தார்.
கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் வெடிப்பு சம்பவத்தில் கோட்டை மேடு பகுதிகள் மீண்டும் கைது அதிகம் நடந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனதுக்கு அப்பறம் திமுக அமைச்சர்கள் மேடையில் பேசியது குறித்து வாசித்து வருகிறார். அமைச்சர்களின் வேலையே உதயநிதி ஸ்டாலினை புகழ்வது மட்டும் தான்.
திமுகவில் 10வது இடத்தில் உள்ள அமைச்சர், அதிகாரத்தையும் ஆட்சியையும் வைத்து சினிமாவை எவ்வளவு நாள் வைத்துக் கொள்கிறார்கள் என பார்ப்போம். ஆரிய திராவிடம் என்பது பொய். இந்த பிரிவினை நான் ஏற்கவில்லை. தமிழ்நாட்டின் நம்பர் 1 நடிகர் முதல்வர் மு.க ஸ்டாலின் தான் என்று கடுமையாக பதில் அளித்தார் அண்ணாமலை.
இதையும் படிங்க..டிசம்பர் 21 - நேரம் குறிச்ச ஓபிஎஸ் டீம்.. பண்ருட்டி ராமச்சந்திரன் போட்ட பிளான்.. பதறும் இபிஎஸ் & கோ