டிசம்பர் 21 - நேரம் குறிச்ச ஓபிஎஸ் டீம்.. பண்ருட்டி ராமச்சந்திரன் போட்ட பிளான்.. பதறும் இபிஎஸ் & கோ

By Raghupati R  |  First Published Dec 17, 2022, 3:30 PM IST

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 21ஆம் தேதி நடைபெறும் என்று ஓபிஎஸ் அணி அறிவிப்பு வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிரிந்துள்ளன.

சென்னை வானகத்தில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழு  ஜூலை 11 ஆம் தேதி  பொதுக்குழுவை கூட்டியது. அப்பொதுக்குழுவில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Tap to resize

Latest Videos

இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், அதிமுக நிர்வாகி வைரமுத்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இருவரும் தங்களுக்கு சாதகமாக மாறி, மாறி கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருவதால் இந்த வழக்கு நீண்டு கொண்டிருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க..அதிசயம்.!! நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை.. வைரலாகும் போட்டோஸ் !

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுவில், அதிமுக பொதுக்குழு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் மீது தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் கட்சிப் பணிகள் தொய்வடைந்துள்ளது என்று குற்றஞ்சாட்டி உள்ளனர்.

மேலும், அதனால் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார். கடந்த 12 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அலுவல் நேரம் முடிவடைந்ததால் இந்த வழக்கு விசாரணை நாளை டிசம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அதிமுக பொதுக்குழு வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க..ஜனவரி 4ம் தேதி பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு !

விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்பதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. குளிர்கால விடுமுறைக்கு பின்பாக மனுக்கள் விசாரணை செய்யப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 21ஆம் தேதி நடைபெறும் என்று ஓபிஎஸ் அணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதலோடு தலைமைக் கழகம் பெயரில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழு கட்சி கூட்டம், போராட்டம் என்று ஆக்டிவாக இருப்பதால், ஓ.பன்னீர்செல்வமும் தன்னுடைய பங்குக்கு ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் என்றும் கிசுகிசுக்கின்றனர்.

இதையும் படிங்க..பணம் கொட்டும் தொழில்.! குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டக்கூடிய சூப்பர் தொழில் !

click me!