நாடாளுமன்ற தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி - துரைவைகோ

By Velmurugan s  |  First Published Dec 17, 2022, 2:30 PM IST

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவுடனான கூட்டணி தொடரும் என மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரைவைகோ தெரிவித்துள்ளார். மேலும் ஆவின் நெய் விலையேற்றம் என்பது தவிர்க்க முடியாதது என்று தெரிவித்துள்ளார்.


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணியின் மாநில,மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள கட்சி தலைமை  அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் தலைமை கழக செயலாளர் துரை  வைகோ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாநிலத்தில் ஆளுநர் பொறுப்பு தேவையில்லை என்பதை அரசியல் அமைப்பு சட்டத் திருத்தத்தின்  மூலம் கொண்டுவர வேண்டும். உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதனைத் தொடர்ந்து துரைவைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆளுநர் பதவி தேவையில்லை அது ஓழிக்கப்பட வேண்டும். பாஜக ஆட்சி இல்லாத மாநிலத்தில் ஆளுநர் மூலம்  ஒன்றிய அரசு ஆட்சி செய்து வருகிறது. தமிழகத்தின் நலனுக்காக சட்டப்பேரவையில் நிறைவேற்றக்கூடிய சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார்.

Tap to resize

Latest Videos

உதயநிதி மட்டுமல்ல.. அவரது மகன் வந்தாலும் வாழ்க என்று சொல்லுவோம்.. இபிஎஸ் கோட்டையில் கர்ஜித்த கே.என்.நேரு..!

ஆன்லைன் அவசர சட்ட மசோதா விவகாரத்தில் காலம் தாழ்த்துவதன் காரணமாக தமிழகத்தில் வாரம் இரண்டு பேர் உயிரிழந்து வருகின்றனர். பிற மாநிலங்களிலும் உயிரிழப்புகள் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன.

ஐஐடி பணியிடங்களில் இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்பட வேண்டும். ஆவினில் நெய் ஒரு லிட்டர் விலை 50 ரூபாய் உயர்வு  என்பது தவிர்க்க முடியாதது. பாஜக ஆட்சி செய்கின்ற கர்நாடக மாநிலத்தை ஒப்பிடும்போது இதன் விலை தற்போது சரிசமமாகவே உள்ளது.

திமுகவுக்கு ஒன்னு மட்டும் சொல்றேன்! அம்மா சொல்லை வேண்டுமானால் நீங்க நீக்கிவிடலாம்.. ஆனால்.. சசிகலா ஆவேசம்.!

மேலும் திமுகவுடன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும். மதச்சார்பற்ற கூட்டணியில் ஒத்த கருத்துடைய கட்சிகளும் இணைய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும் உதயநிதி ஸ்டாலின் மக்களால் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே அவர் அமைச்சராக தேர்வு செய்யப்பட்டது வரவேற்கக்  கூடியது. வாரிசு அரசியல் என்பதை தான் ஏற்கவில்லை மக்கள் விருப்பப்பட்டால் தான் ஒருவர் அரசியலில் வளர முடியும் எனக் கூறினார்.

 

click me!