இந்து மதத்தை எதிர்க்கவில்லை; சனாதன தர்மத்தில் உள்ள சில கோட்பாடுகளை தான் எதிர்க்கிறோம் - அமைச்சர் தகவல்

By Velmurugan sFirst Published Sep 14, 2023, 5:26 PM IST
Highlights

இந்து மதத்தை திமுக எதிர்க்கவில்லை என்று விளக்கியுள்ள தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சனாதன தர்மத்தில் உள்ள சில கோட்பாடுகளை தான் எதிர்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை ஆய்வு செய்த பின்பு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நீண்ட நாட்களாக திருப்பணி நடைபெறாமல் உள்ள திருக்கோவிலுக்கு குடமுழுக்கு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில் 400 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆட்சியில் குடமுழுக்கு நடைபெற்றது.

பல்வேறு கோவில்களில் இந்த ஆட்சியில் நின்று போயிருந்த தேரோட்டங்கள் நடைபெற்று வந்துள்ளது. சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் 2016 ஆம் ஆண்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஓராண்டில் 90% பணிகள் நடைபெற்றுள்ளது. அக்டோபர் மாதம் 27ம் தேதி குடமுழுக்கு நடைபெறும் என தெரிவித்தார்.

காவிரி விவகாரம்; முதல்வர் ஸ்டாலினின் புகைப்படத்தை கிழித்து வாட்டாள் நாகராஜ் அட்டூழியம் - வேடிக்கை பார்த்த போலீஸ்

கோவில்களையும் பொக்கிஷமாக பாதுகாக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. தெய்வங்களையும் இறை அன்பர்களையும் மகிழ்ச்சியாக வைக்கும் ஆட்சியாக திமுக அரசு உள்ளது. திருக்கோவில்கள், திருத்தேர்கள், விருந்து மண்டபங்கள் அனைத்தும் செப்பனிடப்பட்டு சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தினமும் உளறிக் கொண்டிருக்கிறார். அவரின் நடைபயணம் முழுக்க தோல்வி அடைந்துள்ளது. சாதனாதானத்தை ஏற்றுக் கொள்பவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்த ஆட்சி சமத்துவ ஆட்சி, சமத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்துகிறோம். அதனை வலியுறுத்தும் கடமை, உறுதி, திமுக அரசின் அமைச்சர்களுக்கு உள்ளது.

அண்ணாமலை எங்களின் பணியை திசை திருப்ப முயற்சிக்கிறார். ஆனால் தொடர்ந்து எங்களுடைய திருப்பணி தொடரும். சென்னை காசி விஸ்வநாதர் கோவில் குடமுழுக்கு விழா அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்டது. 94 அர்ச்சகர் பயிற்சி வகுப்பில் மூன்று பேர் பெண்கள் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறோம். இதைத்தான் நாங்கள் சமத்துவ ஆட்சி என கூறுகிறோம்.

மாமியாருக்கும், மருமகளுக்கும் தனித்தனியாக உரிமைத் தொகை வழங்க வேண்டும் - அண்ணாமலையின் கோரிக்கையால் மகளிர் குஷி

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் 38 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த ஆட்சியில் தான் எட்டு பேர் பெண் ஓதுவார்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. சேலம் குமரகிரி கோயில் சென்றாய பெருமாள் கோவில்கள் திருப்பணியை விரைவு படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . அடுத்த முறை நேரடியாக கள ஆய்வு செய்து திருப்பணிகள் முடிக்கப்படும் என தெரிவித்தார். கோவில்களில் நடைபெறும் முறைகேடுகள் படிப்படியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள் அவர்களாகவே திருந்த வேண்டும்.

இந்து கோவில்கள் மன்னராட்சியில் ஏற்படுத்தப்பட்டவை. இந்து கோவில்கள் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மற்ற மத கோவில்கள் அவர்களின் சொந்த நிதியில் கட்டப்பட்டது. அதனால் அவர்கள் கோவில்கள் அவர்கள் நிர்வாகிப்பார்கள். நிர்வாக சீர்கேடுகள் ஏற்படும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். 

சனாதானத்தை ஏற்றுக் கொள்பவர்கள் அனைவரையும் நாங்கள் வெறுக்கவில்லை, குலக்கல்வி, உடன்கட்டை ஏறுதல் உள்ளிட்ட சில கோட்பாடுகளை நாங்கள் எதிர்க்கிறோம். இந்து மதத்தை தமிழக முதல்வர் எந்த இடத்திலும் குற்றம் சொல்லவில்லை. இறை நம்பிக்கையை எதிர்த்து எங்கும் பேசவில்லை. சமத்துவத்தின் ஓர் அங்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம் என தெரிவித்தார்.

click me!