காவிரி விவகாரம்; முதல்வர் ஸ்டாலினின் புகைபடத்தை கிழித்து வாட்டாள் நாகராஜ் அட்டூழியம் - வேடிக்கை பார்த்த போலீஸ்

By Velmurugan s  |  First Published Sep 14, 2023, 4:18 PM IST

காவிரி விவகாரத்தில் எங்களுக்கே தண்ணீர் இல்லாதபோது உங்களுக்கு எப்படி தண்ணீர் வழங்க முடியும் என்று கூறி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை கிழித்து வாட்டாள் நாகராஜ் அட்டூழியத்தில் ஈடுபட்டார்.


கர்நாடகா - தமிழக மாநில எல்லையான அத்திப்பள்ளி என்னுமிடத்தில் காவிரி குறுக்கே மேகதாது அணைக்கட்ட தொடர்ந்து இடையூறு செய்வதையும், காவிரியில் நீர் கேட்கும் தமிழக அரசை கண்டித்து கன்னட சலுவலி வாடல் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கர்நாடகா ஜாக்ருதி வேதிகே உள்ளிட்ட கன்னட அமைப்புக்களை சேர்ந்தவர்கள் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தமிழக அரசை கண்டிக்கும் விதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை கன்னட அமைப்பினர் கிழித்தெறிந்து சாலையில் அமர்ந்து போராடிய நிலையில் வாட்டாள் நாகராஜ் சம்மதம் தெரிவிக்கும் வரை காத்திருந்த காவல் துறையினர் அவர் சம்மதம் தெரிவித்தவுடன் பல்லக்கில் தூக்கிச் செல்வது போல் அலுங்காமல், குலுங்காமல் பல்லக்கு இல்லாத காரணத்தினால் கைகளில் தூக்கிச் சென்று காவல் வாகனத்தில் ஏற்றினர். 

Tap to resize

Latest Videos

மாமியாருக்கும், மருமகளுக்கும் தனித்தனியாக உரிமைத் தொகை வழங்க வேண்டும் - அண்ணாமலையின் கோரிக்கையால் மகளிர் குஷி

முன்னதாக பத்திரிகையாளர்களுக்கு கன்னடத்தில் பேட்டியளித்த வாட்டாள் நாகராஜ், நான் கையில் காலி குடம் வைத்திருப்பது தான் எங்கள் மாநிலத்தின் நிலைமை. விவசாயம், குடிக்கவே நீரில்லை, இது ஸ்டாலினுக்கு புரியாமல் அரசியல் செய்து வருகிறார். கிருஷ்ண ராஜ சாகர் அணை, ஹேமாவதி அணைகளில் நீர் இல்லை. ஆனால் ஸ்டாலின் பிளாக் மெயில் செய்து வருவது சரியல்ல.

குடிக்கவே நீர் இல்லை என்றால் பெங்களூரு கதி என்ன, அங்குள்ள தமிழர்களின் நிலை என்ன? முதல்வருக்கு உறவினர்கள் யாரும் கர்நாடகாவில் இல்லையா? இதில் தமிழக அரசு அரசியல் செய்வது சரியல்ல. தமிழக அரசை கண்டிப்பது எங்கள் உத்தேசமில்லை. நீர் இருந்தால் கொடுப்போம் இப்போது இல்லை.

கொடநாடு விவகாரம்; உண்மையை மறைக்க ரூ.2 ஆயிரம் கோடி பேரம் - தனபால் பரபரப்பு குற்றச்சாட்டு

இந்திய கூட்டணியில் காங்கிரஸ், திமுக அங்கம் வகித்தாலும் கர்நாடகாவும், கன்னடர்களும் தான் முதன்மை. நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமலஹாசன் காவிரி விவகாரத்தில் மௌனமாக இருக்காமல் வாய் திறந்து பேச வேண்டும். எங்கள் வேதனை கண்ணீர் தெரியவில்லையா என்றார்.

click me!