ஒரே குடும்பமாக இருந்தாலும் மாமியாருக்கும், மருமகளுக்கும் தனித்தனியாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்னும் யாத்திரையை தொடர்ந்து நடத்தி வருகிறார். இதில் 59-வது தொகுதியாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்னாளப்பட்டியில் நடைபயணமாக வந்தார். அவருக்கு பொய்க்கால் குதிரை, மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து மேடையில் அண்ணாமலை, இரண்டே கால் கோடிக்கு மேல் தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் இருக்கின்றன. மகளிர் உதவித்தொகை என்றால் கொஞ்சம் பேருக்கு கொடுக்கலாம் கொஞ்சம் பேருக்கு கொடுக்க முடியாது. ஆனால் இது மகளிர் உரிமைத்தொகை. முதல் கட்டமாக மகளிர் உரிமைத் தொகையில் 70 லட்சம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரே வீட்டில் மாமியார், மருமகள் இருந்தால் ஒரு நபருக்கு மட்டும் தான் கணக்கில் கொள்ளப்படும். இதனால் மாமியார் மருமகளுக்கும் ஏற்படக்கூடிய பஞ்சாயத்தை யார் தீர்த்து வைப்பது...?
undefined
திருப்பி அனுப்பப்பட்ட 6 ஆயிரம் கோடி
தமிழகத்தை பொறுத்தவரை கூட்டுக்குடும்பமாக உள்ளனர். ஒரே குடும்பத்தில் மாமியார் மருமகள் இருந்தால் இரண்டு குடும்பமாகத்தான் கருதப்படும். மாமியாருக்கும் தரப்பட வேண்டும், மருமகளுக்கும் தர வேண்டும். சண்டை போட்டு, சண்டை போட்டு 45 நாட்களாக 70 லட்சத்திலிருந்து ஒரு கோடியே 6 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இன்னும் இரண்டே கால் கோடிக்கு உயர்த்தப்பட வேண்டும். இன்றைய தேதியில் 60% மகளிர்க்கு மகளிர் உரிமைத்தொகை கிடையாது என்றும், மத்திய அரசு 6000 கோடி ரூபாய் பணத்தை திருப்பி அனுப்பி உள்ளார்கள். இது மகளிர் உரிமை தொகைக் காண பணம் கிடையாது.
அரசு நிர்வாகம் சீர்கெட்டுவிடும்
பட்டியலின சமூக மக்களுக்கான பணம். கடந்த ஆண்டு 13 ஆயிரம் கோடி ரூபாய் மோடி அரசு ஒதுக்கியது. இதில் மாநில அரசு 6000 கோடி ரூபாய் செலவு செய்தது. 6 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை திருப்பி அனுப்பியது. 10 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை திருப்பி அனுப்பும் அளவிற்கு பட்டியல் இன சமூக மக்களுக்கு அனைத்து சலுகைகளும் கிடைக்கப் பெற்று விட்டதா? மேலும், இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் உள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் தமிழக அரசின் நிர்வாகம் சீர்கெட்டு விடும்.
கொடநாடு விவகாரம்; உண்மையை மறைக்க ரூ.2 ஆயிரம் கோடி பேரம் - தனபால் பரபரப்பு குற்றச்சாட்டு
இந்த ஆத்தூர் தொகுதியில் பெரியசாமி ஒரு லட்சத்து 35 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது நாளையே தேர்தல் நடந்தாலும் அதே ஒரு லட்சத்து 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வி அடைவார். திமுக அரசு குடும்ப ஆட்சி நடைபெறுகிறது. குறிப்பாக மருமகன் சபரீசன் மற்றும் மகன் உதயநிதிக்காக ஆட்சி நடைபெற்று வருகிறது.
காமராஜ் ஆட்சி காலத்தில் சத்தியமூர்த்தி கல்வி அமைச்சராக இருந்த துறையில் உதயநிதி ரசிகர் மன்ற தலைவராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வி அமைச்சராக உள்ளார். டாஸ்மார்க் மது கடைகளில் 40 சதவீத சரக்குகள் திமுகவை சேர்ந்த டி ஆர் பாலு, ஜெகத்ரட்சகன், டிஆர்பி ராஜா ஆகியோர் ஆலையிலிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
தமிழர்கள் நலனில் பிரதமர்
பிரதமருக்கு இருக்கும் வேலைக்கு மத்தியில் 2 முறை பிரதமர் தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்டு தமிழக மக்கள் என்ன குறைகளை சொல்கிறார்கள் என்று கேட்டு குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சி செய்து வருகிறார். திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பெங்களூரில் வட்டிக்கடை நடத்தி வருகிறார். தமிழகத்தில் ஒரு எம்பி தொகுதி கிடைக்க விட்டாலும் பாரதத்தில் 400 தொகுதியில் வெற்றி பெற்று மூன்றாம் முறையாக மோடி பிரதமராக பதிவிற்பார்.
திமுகவுடைய முக்கிய மூன்று குறிக்கோளே ஊழலில் ஈடுபடுவது, சனாதனத்தை ஒழிப்பது, மோடியை திட்டுவது. தமிழகத்தில் தினமும் ஒரு அமைச்சர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு இந்து அறநிலைத்துறை அலுவலகத்தை நோக்கி முற்றுகை போராட்டம் செல்ல முயன்ற போது என்னை கைது செய்யவில்லை என்பதற்காக உயர் போலீஸ் ஒருவரை காத்திருக்கும் பட்டியலுக்கு மாற்றியுள்ளனர்.
சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு போனா பேண்ட கலட்ட சொல்றாங்க - பெண் மருத்துவர் பரபரப்பு குற்றச்சாட்டு
நான் யாத்திரைக்கு செல்லும் இடங்களில் என்னுடன் மோத முடியாமல் மின்சாரத்தை துண்டிக்கிறார்கள். சீப்பை ஒழித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடுமா? நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் என்னை தொட்டுப்பார்?
எனக்கு பதவி ஒரு பிரச்சினையே இல்லை. ஒன்பது ஆண்டுகள் ஐபிஎஸ் அதிகாரியாக பல்வேறு பொறுப்புகளை வகித்தவன். தற்போது ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு விவசாயம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். தமிழக முதலமைச்சர் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் திமுகவினர் யாரும் சனாதனத்தை பற்றி பேசவே கூடாது எனக் கூறியுள்ளார். அதற்காக உங்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.