கொரோனா 3வது அலை, ‘சென்னை 2.0’, நீட் தேர்வு, 15 நாட்களில் ரேஷன் கார்டு... ஆளுநர் உரையின் முக்கிய அறிவிப்புகள்!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 21, 2021, 11:31 AM IST
Highlights

விவசாயிகள், மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள், மாநில சுயாட்சி, தமிழ் மொழி  உள்ளிட்ட பல்வேறு முக்கிய  அம்சங்கள் ஆளுநர் உரையில் இடம் பெற்றிருந்தன. 
 

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. 16வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. விவசாயிகள், மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள், மாநில சுயாட்சி, தமிழ் மொழி  உள்ளிட்ட பல்வேறு முக்கிய  அம்சங்கள் ஆளுநர் உரையில் இடம் பெற்றிருந்தன. 

 

இதையும் படிங்க: முடியவே முடியாது... மூணு கோடி எக்ஸ்ட்ரா வேணும்... கறார் காட்டும் பிரபல நடிகை...!

அதில் முக்கியமான சில திட்டங்கள், அறிவிப்புகள் இங்கே...

. இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களையும் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் தமிழ்நாடு அரசு மத்திய அரசை வற்புறுத்தும்.

.  தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசு பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் அரசு பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும்;  அதை இந்த அரசு உறுதி செய்யும்.

. திருநங்கைகளின் வாழ்க்கையும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேலைவாய்ப்பு பெறுவதற்கும் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற வகையில் திறன் பயிற்சி அளிக்கப்படும்

.  கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 335 கோடி வரப்பெற்றுள்ளது.  அந்த தொகையில் இருந்து கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடு       நடவடிக்கைகளுக்கு 50 கோடி ஒதுக்கப்படும்.

.  மதுரை,திருச்சிராப்பள்ளி,சேலம் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெருந்திறள் விரைவு போக்குவரத்து அமைப்புக்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். 

 . கொரோனா தொற்று  குறைந்தவுடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

.  தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு பணிநியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தும்

.  அனைத்து முக்கிய இந்து கோயில்களிலும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும் கோயில்களில் பராமரிப்பை செம்மைபடுத்துவதற்கும் ஆலோசனைகளை வழங்குவதற்கு மாநில அளவிலான ஒரு உயர்மட்ட ஆலோசனைக் குழு மீண்டும் அமைக்கப்படும்

.  வேலை வாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிக அளவில் ஊக்குவிக்கும் வகையில் பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் மாவட்டம் தோறும் நிறுவப்படும்.

.  அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்களுக்கான புதிய காப்பீட்டு திட்டத்தின் பலன்கள் மேலும் உயர்த்தப்படும். 

.  குடும்ப அட்டை விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த அனைவருக்கும் 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும். 

.  மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் விரிவுபடுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

.  குழந்தைகள் தொடர்ந்து கல்வி கற்பதை உறுதி செய்ய இலக்கு சார் திட்டம் செயல்படுத்தப்படும்.

.  உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் மூலம், இதுவரை 63,500 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.

.  OBC இடஒதுக்கீட்டில் தற்போதைய வருமான வரம்பினை ரூ.25 லட்சமாக உயர்த்த மத்திய அரசுக்கு கோரிக்கை.

.  தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டு கொள்கை காலத்தை வென்று சமூக நீதியை உறுதி செய்துள்ளது. இந்த வகையில் தமிழகத்தில் வழங்கப்படும் 69 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும்.


.  சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க தொழிலதிபர்கள், நிதித்துறை வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். 

.  நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டுப்லோ, ஒன்றிய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் இவர்களை கொண்டு  பொருளாதார ஆலோசனை சிறப்புக் குழு அமைக்கப்படும்.

.  மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்திட அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்.

. பரம்பிகுளம்- ஆழியாறு ஒப்பந்தத்தின் கீழ் இடைமலையாறு கட்டுமானத்தை கேரளா அரசு நிறைவு செய்துள்ளதையடுத்து, தொடர்ச்சியாக ஆனைமலையாறு அணை கட்டுவதற்காக கேரள அரசுடனான பேச்சுவார்த்தையை தமிழக அரசு தொடங்கும்.

.  உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகள் அமைக்கப்படும். 

.  தமிழ்நாட்டின் சுற்றுலாத் திறனை முழுமையாக வெளிக்கொணரும் வகையில், ஒரு பெருந்திட்டம் நடப்பாண்டில் வெளியிடப்படும்.

.  பழங்காலக் கோட்டைகளும், அரண்மனைகளும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, பாரம்பரிய சுற்றுலா ஊக்குவிக்கப்படும்.


 

click me!