முதலமைச்சர் ஸ்டாலினை வீட்டிற்கே வந்து சந்தித்த ஆளுநர்.. நோய்தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளதாக பாராட்டு.

Published : Jun 21, 2021, 10:37 AM IST
முதலமைச்சர் ஸ்டாலினை வீட்டிற்கே  வந்து சந்தித்த ஆளுநர்.. நோய்தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளதாக பாராட்டு.

சுருக்கம்

சென்னை சிஐடி நகரில் உள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இல்லத்தில் தெலுங்கான ஆளுநரும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சந்தித்தார்.  

சென்னை சிஐடி நகரில் உள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இல்லத்தில் தெலுங்கான ஆளுநரும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சந்தித்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைந்துள்ள நிலையில், முதன்முதலாக தமிழகம் வந்ததாகவு,  புதிதாக ஆட்சி  அமைத்த முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறினார்.

இச்சந்திப்பின் போது,  புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம் ஆனது தமிழகத்திற்கும் பயன்பெறும் வகையில் உள்ளது. அது தொடர்பான திட்டங்களை பற்றியும் விவாதித்ததாக  தெரிவித்தார்.மேலும் கோதாவரி திட்டம் பற்றியும் முதலமைச்சருடன் பேசியதாகவும் கூறினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பாராட்ட தக்கதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
மாநிலங்கள் பயன்பெறும் வகையில் ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டார். 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!