தண்ணீர் பிரச்னைக்காக கதறும் டைட்டானிக் ஹீரோ... அதிர்ச்சியில் தமிழக அரசியல்வாதிகள்..!

Published : Jun 26, 2019, 11:51 AM IST
தண்ணீர் பிரச்னைக்காக கதறும் டைட்டானிக் ஹீரோ... அதிர்ச்சியில் தமிழக அரசியல்வாதிகள்..!

சுருக்கம்

தமிழகம் தண்ணீரின்றி தவிப்பது குறித்து ஹாலிவுட் திரையுலகின் டைட்டானிக் பட ஹீரோ மிகவும் வருத்தப்பட்டுள்ளார்.    

தமிழகம் தண்ணீரின்றி தவிப்பது குறித்து ஹாலிவுட் திரையுலகின் டைட்டானிக் பட ஹீரோ மிகவும் வருத்தப்பட்டுள்ளார்.  

சென்னை வறட்சி குறித்து ஹாலிவுட் நடிகரும் டைட்டானிக் படத்தின் கதாநாயகனுமான லியானார்டோ டி காப்ரியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் " மழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும். ஒரு கிணறு முற்றிலுமாக வறண்டு இருக்கிறது. இந்தியாவின் தென்னகத்து நகரமான சென்னை கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை சந்தித்துள்ளது. ஏரிகள் வறண்டுவிட்டன.

குடிநீருக்காக மக்கள் காலி குடங்களுடன் அரசு தரும் தண்ணீருக்காக வரிசையில் மணி கணக்காக காத்து இருக்கின்றனர். தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்கள் மூடப்பட்டுவிட்டன. அரசு அதிகாரிகள் இந்தத் தட்டுப்பாட்டை போக்க மாற்று வழிகளை தொடர்ந்து யோசித்து வருகின்றனர். ஆனால், சென்னை வாழ் மக்கள் மழைக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்கின்றனர்" என தெரிவித்துள்ளார். 

 

உலகக் புகழ்பெற்ற "டைட்டானிக்", "தி ரெவனன்ட்" உள்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் லியானார்டோ டி காப்ரியோ. சிறந்த நடிகருக்காக ஆஸ்கர் விருதினையும் அவர் பெற்றுள்ளார். தண்ணீர் பிரச்னையை அரசியலாக்கி வரும் அரசியல்வாதிகள் லியானர்டோ டிகாப்ரியோவின் இந்தப்பதிவால் இன்ப அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!