ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.வின் மகன் மீது வழக்குப்பதிவு...!

By vinoth kumarFirst Published Jun 26, 2019, 11:17 AM IST
Highlights

ஈரோட்டில் செய்தியாளர்களை தாக்கியதாக அதிமுக எம்.எல்.ஏ.வின் மகன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஈரோட்டில் செய்தியாளர்களை தாக்கியதாக அதிமுக எம்.எல்.ஏ.வின் மகன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

ஈரோட்டில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு விரைவில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், எம்.எல்.ஏ. கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு மற்றும் அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது, கடந்த ஆண்டு மடிக்கணினி கிடைக்காத மாணவர்கள் தங்களுக்கு உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும் என கூறி பள்ளியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, மாணவ, மாணவிகள் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து செய்தி சேகரிக்க சென்ற 2 செய்தியாளர்கள் புகைப்படம் எடுத்த போது அவர்களை தடுத்த எம்.எல்.ஏ. கே.வி ராமலிங்கத்தின் மகனும் மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளருமான ரத்தன்பிரத்வி உள்பட கட்சியினர் சிலர் செய்தியாளர்களை தாக்கினர். இதில், காயமடைந்த செய்தியாளர்கள் இருவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த சம்பவத்துக்கு பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே, இச்சம்பவம் குறித்து ஈரோடு வடக்கு காவல்நிலைய போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட ரத்தன் பிரத்வி உள்பட அதிமுகவினர் 5 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.

click me!