பக்கோடா போடும் திருவொற்றியூர் பாஜக வேட்பாளர்… வித்தியாசமான முறையில் தேர்தல் பிரச்சாரம்!!

Published : Feb 14, 2022, 05:14 PM IST
பக்கோடா போடும் திருவொற்றியூர் பாஜக வேட்பாளர்… வித்தியாசமான முறையில் தேர்தல் பிரச்சாரம்!!

சுருக்கம்

சென்னை திருவொற்றியூர் பாஜக  வேட்பாளர் மணிகண்டன் தள்ளுவண்டி கடையில் பக்கோடா சமைத்து கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

சென்னை திருவொற்றியூர் பாஜக  வேட்பாளர் மணிகண்டன் தள்ளுவண்டி கடையில் பக்கோடா சமைத்து கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழகத்தில் 21 மநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேருராட்சிகள் என மொத்தம் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி இந்த உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,468 நகராட்சி உறுப்பினர்கள், 8,288 பேருராட்சி உறுப்பினர்கள் என 12,820 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட இருகின்றனர். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

பிரச்சாரம் முடிவடைய இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திருவொற்றியூர் பாஜக வேட்பாளர் மணிகண்டன் திருவொற்றியூர் வடக்கு மாட வீதி பகுதியில் தள்ளுவண்டி கடையில் பக்கோடா சமைத்து அப்பகுதி மக்களிடம் கொடுத்து தாமரை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் வடக்கு மாட வீதி பகுதியில் வசிக்கும் மக்களை அவர்களின் வீடுகளுக்குச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி தாமரை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி தெரிவித்தார்.

மேலும் அப்பகுதியில் உள்ள அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாகவும், வாக்குறுதி கொடுத்து அனைவரும் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கள் தலைவர் தனித்து போட்டியிடுவது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை மக்களிடையே பெரிதும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு நாட்கள் கூட்டணியில் இருந்ததை விட தற்போது தனித்து போட்டியிடுவது மக்களிடயே முழு ஆதரவை ஏற்படுத்தியுள்ளது. தாமரை சின்னம் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல் இந்த தேர்தலில் பெரிதுமான ஒரு தடத்தை நிச்சயம் பா.ஜ.க பதிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!