பாஜகவில் இணைந்த திமுக நிர்வாகி… காரணம் இதுதான்… அண்ணாமலை டிவீட்!!

By Narendran SFirst Published Aug 24, 2022, 8:51 PM IST
Highlights

திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் க.பாலமுருகன் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில், தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். 

திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் க.பாலமுருகன் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில், தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் க.பாலமுருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில், இன்று பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் ஊழலற்ற உன்னதமான மக்களாட்சியால் ஈர்க்கப்பட்டு க.பாலமுருகன் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: ஒன்றரை ஆண்டில் இத்தனை சாதனைகள்.. யோக்கியதை இருக்கா? எதிர்கட்சிகளை கிழித்த முதல்வர் ஸ்டாலின்!

திமுகவின் குடும்ப ஆட்சி என்ற சிலந்தி வலையிலிருந்து மீண்டு நமது பாரத பிரதமர் திரு அவர்களின் ஊழலற்ற உன்னதமான மக்களாட்சியால் ஈர்க்கப்பட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் திரு க.பாலமுருகன் அவர்கள் இன்று தன்னை வில் இணைத்துக்கொண்டார். pic.twitter.com/w7cczIpsQN

— K.Annamalai (@annamalai_k)

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், திமுகவின் குடும்ப ஆட்சி என்ற சிலந்தி வலையிலிருந்து மீண்டு நமது பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஊழலற்ற உன்னதமான மக்களாட்சியால் ஈர்க்கப்பட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் க.பாலமுருகன் இன்று தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார் என்று பதிவிட்டுள்ளார். திமுக இளைஞரணியில் முக்கியமான உறுப்பினராக க.பாலமுருகன் இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பாஜக நிர்வாகிகள் பலர் இன்று திமுகவில் இணைந்தனர். இன்று திமுகவில் இணைந்த 50,000 பேரில் கணிசமான எண்ணிக்கையில் அதிமுகவினர் அடங்குவர்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமியா? செந்தில் பாலாஜியா? கொங்கு மண்டலம் யாருக்கு?

பாஜக நிர்வாகிகள் 1000 பேர் வரை திமுகவில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் தொண்டர்கள் என்றும் கூறப்படுகிறது. இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திமுகவுக்கு பதிலடியாக திமுகவின் முக்கிய நிர்வாகியான திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் க.பாலமுருகனை பாஜக தட்டி தூக்கி உள்ளது. திமுகவில் இன்று பலர் இணைந்த நிலையில் திருப்பூரில் இவர் திமுகவில் இருந்து பாஜகவிற்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

click me!