தேர்தல் ஆணையமே ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது...!!! - திருமாவளவன் வருத்தம்

 
Published : May 02, 2017, 01:20 PM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
தேர்தல் ஆணையமே ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது...!!! - திருமாவளவன் வருத்தம்

சுருக்கம்

tirumavalavan pressmeet about EC corruption

தேர்தல் ஆணையமே ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவது வேதனையானது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.

மாநில சுயாட்சி என்பது ஒவ்வொரு மாநிலத்தின் உரிமை. இதை பாஜக விமர்சிப்பது உகந்தது அல்ல. மாநில சுயாட்சி தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல. அனைத்து மாநிலத்துக்கும் பொருந்தும் விஷயமாகும்.

மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மாநில அரசு கோரிக்கை மத்திய அரசிடம் விடுத்துள்ளது. இதற்கான ஆவணத்தில் குடியரசு தலைவர் கையெழுத்திட்டு, ஒப்புதல் அளிக்கவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக கிராம மாணவர்கள் பாதிப்பை தடுக்க வேண்டும்.

விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தி அய்யாகண்ணு, விவசாயிகளுக்காக போராடினாலும், இந்திய அளவில் மாறிவிட்டது. தேசிய அளவில் விவாதிக்க கூடியதாக மாறிவிட்டது. ஆனால் பாஜகவினர் அய்யாகண்ணு மீது ஆத்திரமடைந்தனர். அவரை பற்றி விமர்சனம் செய்து வருகின்றனர்.

தமிழக அரசு செயல்பட முடியாமல் பல்வேறு நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. அதிமுகவில் இரு அணிகள் உருவாக்கி தமிழக அரசியலில், மத்திய அரசு குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்பதை மறுக்க முடியாது. இதை அனைவரும் அறிவார்கள். மக்கள் இதை பற்றி பேசுவதை நன்றாக கேட்க முடிகிறது.ரசு செய்கிறது. என்பதை மறுக்க முடியாது. மக்களுக்கு தரியம்.

கொடநாடு ஜெயலலிதாவின் பங்களாவில் வேலை பார்த்த காவலாளி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அடுத்தடுத்து சம்பவங்கள் நடந்து வருகிறது. இது பல்வேறு யூகத்தை உருவாக்குகிறது. இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கை தமிழக அரசு விசாரித்தால், எவ்வித முன்னேற்றமும் கிடைக்காது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஜெயலலிதாவின் பங்களாவில் காவலாளி கொலை, விபத்தில் உயிரிழப்பு. இதுபோன்ற சம்பவங்களின் பின்னணி பற்றி தகவல்கள் தேவை.

டிடிவி.தினகரனை போலீசார் கைது செய்துள்ளனர். லஞ்சம் கொடுக்க முயன்ற டிடிவி.தினகரனை போலீசார் கைது செய்தபோது, லஞ்சம் வாங்க முயன்ற அதிகாரி யார் என்பதை ஏன் வெளியே கொண்டு வரவில்லை.

டிடிவி.தினகரன் தவறு செய்தால், தமிழகத்துக்கு மட்டுமே அவமானம். ஆனால், தேர்தல் ஆணைத்தில் உள்ள அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்க முயன்று இருப்பது தேச அளவில் அவமானமாகும். தேர்தல் ஆணையமே ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவது வேதனையானது. இதற்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!