
அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சு வார்த்தை நடைபெறும் என பேசப்பட்டு வருகிறது. இதற்காக இரு தரப்பிலும் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பேச்சு வார்த்தைக்கான காலம் கனிந்துள்ளது என பேசி வருகின்றனர்.
இதற்கடையில் மாநிலம் முழுவதும் தொண்டர்களை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்த ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார். இதற்கான சுற்று பயணத்தை வரும் 5ம் தேதி அவர் தொடங்குகிறார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
எங்கள் அணி தலைவர் ஓ.பன்னீர்செல்வம், மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது, நிர்வாகிகளை சந்தித்து, கட்சியை பலப்படுத்துவதற்கான ஆலோசனை நடத்த உள்ளார்.
தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான பேச்சு வார்த்தைக்கும், இந்த சுற்றுப் பயணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்களது கட்சி செயல்பாடுகளை வேகப்படுத்தவும், துரிதப்படுத்தவும்தான் இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டத்தில் தொடங்கும் இந்த பயணம், கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்க இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.