
தமிழக அரசு நிர்வாகம் தொய்வின்றி நடப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோக் என என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டை பகட்டான பேச்சால் மறைக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் அரசு தவறான தகவல் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள மு.க.கஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாமல் தவறான தகவலை அரசு சார்பில் யாரும் தாக்கல் செய்திருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள், கோரிக்கைகளை முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும் என்றும் ஸ்டாலினி வசியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு நிர்வாகம் தொய்வின்றி நடப்பதாக முதலமைச்சர் கூறுவது இந்தாண்டின் மிகப்பெரிய ஜோக் என்றும் நிர்வாக சீர்கேட்டை மிகப்பெரிய கம்பளம் விரித்து மறைக்க வேண்டாம் என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.